ஐபிபிஎஸ் கிளார்க் நிலை தேர்வுக்கு
இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 19 வங்கிகளில் 7,275 கிளார்க் நிலை பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய ஐபிபிஎஸ் (இன்ஸ்டிட்யூட் ஆப் பாங்கிங் பர்சனல் செலக்ஷன்) இன்று முதல் விண்ணப்பங்களை பெறுகிறது. அக்டோபர் 10 வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. டிசம்பர் மாதம் 8, 9, 15, 16 தேதிகளில் தொடக்க நிலை தேர்வும், ஜனவரி மாதம் 20ம் தேதி மெயின் தேர்வும் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளில் அமைக்கப்படுகின்ற தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது.
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினருக்கான வயது வரம்பு 20 முதல் 28 வரை. விண்ணப்ப கட்டணம் ₹600, பட்டியல் இனத்தவர், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ₹100 கட்டணம்.19 வங்கிகளில் அடுத்த ஆண்டுக்கான கிளார்க் நியமனங்கள் இந்த தேர்வு வழியாகவே நடைபெற உள்ளது. தொடக்க நிலையில் ஐபிபிஎஸ் நிர்ணயம் செய்கின்ற கட் ஆப் மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு பிரதான தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். 190 கேள்விகள் உள்ள மெயின் தேர்வுக்கான நேரம் 160 நிமிடங்கள் ஆகும். தொடக்க நிலை தேர்வில் பிரிவு வாரியாக நேர அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 25 நிமிடம் அதிகமாக பிரதான தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...