பள்ளி
கல்வித்துறை வெளியிட்டுள்ள, பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், தமிழ் மற்றும்
ஆங்கில வழி தேர்வு மதிப்பெண் மாறுபடுவதால், மாணவர்கள் குழப்பம்
அடைந்துஉள்ளனர்.
தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. இதில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவமாக, புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 வகுப்புக்கு, இரண்டு பாகங்களாக, புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதால், வினாத்தாள் எப்படி இருக்கும் என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், இணையதளத்தில், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கு, தனித்தனியாக வினாத்தாள்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், வேதியியல் பாடத்திற்கு, தமிழ் வழிக்கான வினாத்தாளில், எழுத்து தேர்வுக்கு மொத்த மதிப்பெண், 70 என, குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கில வழி வினாத்தாளில், 75 மதிப்பெண் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...