வாட்ஸ் அப் மூலம் பணப்பரிமாற்றம்
செய்யும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
வாட்ஸ் அப்பில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை இந்தியாவில் முழு வீச்சில் கொண்டு வரும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் அலுவலகத்தை தொடங்காமலோ, ஆட்களை பணியில் அமர்த்தாமலோ இச்சேவையை கொண்டு வர முடியாது என மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
தொலை இயக்கி முறையில் இந்த சேவையை கொண்டு வருவதை விரும்பவில்லை என்றும் மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் தெரிவித்தது.
தலைமை நிர்வாக அதிகாரி மாட் ஐடமா தலைமையிலான வாட்ஸ் அப் நிர்வாகிகள் குழு மின்னணு மற்றும் தகவல் அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்தித்த போது இந்த பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை இந்தியாவில் அறிமுக செய்ய வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய குழுவை இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வாட்ஸ் அப் -க்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் வங்கிகள் தொடர்புடைய விவகாரம் என்பதால் ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...