குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு வரும் 27 -ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. தேர்ச்சி பெற்றோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அவர்களது மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகிய நடைமுறைகள் சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 27 -ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன்
தெரிவித்துள்ளார்
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன்
தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...