ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக் கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதி முறையை கொண்டு வந்துள்ளது.
அதோடு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடைவிதிக்கும் வகை யிலும் நடவடிக்கையை கடுமையாக்க முடிவுசெய்துள்ளது.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு ஆசிரி யர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்உள் ளிட்ட பணியிடங்களை நிரப்ப ஆசிரி யர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு களை நடத்திவருகிறது.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வை யும் அவ்வாரியமே நடத்துகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலி டெக்னிக் விரிவுரையாளர் தேர்விலும், தகுதித்தேர் விலும் மதிப் பெண்ணில் திருத்தம் செய்து முறைகேடு நடந்திருப்பதை ஆசி ரியர் தேர்வு வாரியமே ஆய்வு மூலம் கண்டுபிடித்தது. விடைத் தாள்களை ஸ்கேன் செய்து மதிப் பெண் பதிவுசெய்யப்படும் நிலை யில் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருப் பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையா ளர் தேர்வை ரத்துசெய்த தேர்வு வாரியம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித்தேர்வில் மதிப் பெண் முறைகேட்டில் ஈடுபட்ட 200 தேர்வர்களின் தேர்ச்சியை ரத்து செய்துள்ளது. அவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
நம்பகத்தன்மை
டிஎன்பிஎஸ்சி-யுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவான அலுவலர் களையும், பணியாளர்களையும் வைத்துக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மிக வேகமாக தேர்வுகளை நடத்தி முடிவுகளை விரைவாக வெளியிடுகிறது என்று தேர்வர்கள் பாராட்டவே செய் கிறார்கள். எனினும், அண்மைக் காலமாக நடந்துள்ள தவறுகள், அதன் காரணமாக தேர்வு ரத்து நடவடிக்கை, மதிப்பெண்ணை திருத்தியவர்கள் தகுதிநீக்கம் ஆகியவை தேர்வு வாரியத்தின் மீது லேசான சந்தேகப் பார் வையை உண்டாக்கியுள்ளது. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படுவதால் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை தேர்வர்களால் உதாசீனப்படுத்த இயல வில்லை.இந்த நிலையில், தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்ப தாரர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடுமையாக்கியுள்ளது.
அதன்படி, ஆசிரி யர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வு களில் தவறு செய்யும் விண்ணப் பதார்ரகள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கும் வகை யில் புதிய விதிமுறை கொண்டுவரப் பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கறுப்பு பட்டியலில்..
புதிய விதிமுறையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித் தேர்வில் மதிப்பெண்ணை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 200 விண்ணப்ப தாரர்கள் மீது முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்த தேர்வையும் எழுத முடியாது. அவர்களின் பெயர், முகவரி, பிறந்த நாள், கல்வித்தகுதி, இடஒதுக் கீட்டுப்பிரிவு உட்பட அனைத்து விவரங்களும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.எனவே, அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முயற்சி செய் தால் அவர்களின் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.
அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்த தேர்வையும் எழுத முடியாது. அவர்களின் பெயர், முகவரி, பிறந்த நாள், கல்வித்தகுதி, இடஒதுக் கீட்டுப்பிரிவு உட்பட அனைத்து விவரங்களும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.எனவே, அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முயற்சி செய் தால் அவர்களின் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.
தவறு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் விண்ணப் பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடை விதிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
minority teachers exam elutha thadai irukka kudathu plesase
ReplyDeleteஅது ஏன் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்த தேர்வையும் எழுத முடியாதுன்னு சொல்றீங்க, எந்த அரசுத்தேர்வையும் எழுத முடியாதுன்னு அறிவியுங்கள். இதுல மாட்டிக்கிட்ட, வேற துறையில் போர்ஜரி செய்து சேர்ந்துவிட வாய்ப்பிருக்குல.... அதற்கான வழியையும் சேர்த்து மூட வேண்டும். இத்தகைய ஆட்களால்தான், வேலையில்லாமல் விரக்க்தியில், தகுதியுடையவர்கள் தடம் மாறிவிடுகிறார்கள். இதெல்லாம் யார் துணிவுடன் செய்வார்களோ?
ReplyDelete