மத்திய தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவு செய்தால் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவுடன் இளைஞர்களின் முக்கிய பணி வேலை தேடுவது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, நாள்தோறும் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்களை தேடுவதுதான். இதற்கு முக்கிய காரணம் நாட்டில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் 2 லட்சத்து 79 ஆயிரம் பேர். அவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவை என்ற பிரிவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி, இதற்கென தனி இணையதளத்தையும் தொடங்கி உள்ளது. தற்போது படித்த பட்டதாரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகங்களில் இந்த இணையத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களின் செல்போன் எண்ணுக்கு வேலை தரும் நிறுவனங்களில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
அதேபோல் பட்டதாரிகள் மட்டுமின்றி 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ்படித்தவர்களும் தங்களுடைய கல்வித்தகுதிகளை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதில் தாங்கள் என்ன மாதிரியான வேலையை எந்த துறைகளில் தேடுகிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிப்பவர்களுக்கு தொடர்புடைய அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை விண்ணப்பதாரர்கள் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக தகவல்கள் தெரிவிக்கப்படும்.
அதேபோல் பட்டதாரிகள் மட்டுமின்றி 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ்படித்தவர்களும் தங்களுடைய கல்வித்தகுதிகளை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதில் தாங்கள் என்ன மாதிரியான வேலையை எந்த துறைகளில் தேடுகிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிப்பவர்களுக்கு தொடர்புடைய அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை விண்ணப்பதாரர்கள் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக தகவல்கள் தெரிவிக்கப்படும்.
மேலும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோரும் இந்த இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைந்த செலவில் பதிவுசெய்து நம்பகத்தன்மையுடன் கூடிய வேலைவாய்ப்பையும் பெறலாம். இதுதவிர உள்ளூர் சேவை பயிற்சிகள் ஆலோசனைகள் உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த இணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை, படிப்பு சான்றிதழ் ஆகியவை கொண்டு கணக்கை தொடங்க வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களை 180042511 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இதில் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும், பிராந்திய மொழிகளிலும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...