ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 2ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஏற்கனவே இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், இப்போது அறிவித்த சலுகையின் மூலம் 2ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவை பெற முடியும், அதவாது ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக இப்போது 3.5ஜிபி டேட்டாவை பெற முடியும்.
மேலும் ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த 2ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா சலுகை இன்று வரை மட்டுமே வழங்கப்படும் என்று ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் டேட்டா சலுகையுடன் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவையும் வழங்கப்படுகிறது.
ஜியோ பிரிபெய்ட்:
ஜியோ நிறுவனம் அறிவித்த தகவலின் அடிப்படையில் ஜியோ டிஜிட்டல் சலுகை பிரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்ப்பட்டுள்ளது.
பெறுவது எப்படி:
மைஜியோ செயலியில் உங்கள் ஜியோ நம்பரை கொண்டு சோதனை செய்து பார்த்து, பின்பு இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்த முடியும். மேலும் இந்த சிறப்பு சலுகை இன்று வரை மட்டுமே இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.594- ரீசார்ஜ் திட்டம்:
இதற்குமுன்பு ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.594-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 500எம்பி வரை 4 ஜி டேட்டா பயன்படுத்த முடியும், குறிப்பாக ஆறு மாதங்களுக்கு மொத்தம் 84ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். இதனுடன் இலவச வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜனவரி 26, 2018 அன்று ரூ.49 திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி எப்யுபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இலவச உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது. மேலும்வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 50எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...