காவல்துறை,
சிறைத்துறை, தீயணைப்பு துறையில், இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய
நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.தமிழக சீருடை
பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு
துறைக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இரண்டாம் நிலை காவலர்களாக, 6,140 பேரை தேர்வு செய்ய, 2017ல், அறிவிப்பு வெளியானது.இதற்கான எழுத்து தேர்வு, இந்த ஆண்டு மார்ச்சில் நடந்தது; 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.தேர்ச்சி பெற்றோரின் விபரமும், இட ஒதுக்கீடு ரீதியிலான, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரமும், மாவட்ட வாரியாக, www.tnusrb.com என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதியோர், தங்களுக்குரிய ரகசிய எண்களை பதிவேற்றம் செய்து, மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...