Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு ! வருமான வரி பற்றிய முக்கிய செய்தி



நிதி ஆண்டிற்கு Quarter 1,2,3&4 என வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் அதை தாங்கள்தான் தாக்கல் செய்ய வேண்டும் என அலுவலர் (Drawing Officer) கூறியிருப்பார்.........
Income Tax Act -1961 ல் Section 203 ன் படி சம்பளம் பெற்று தரும் அலுவலர் தான் நாம் வாங்கும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து மத்திய அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.
சம்பளம் வழங்கும் அலுவலர் Section 203 ன் படி Quarter 1,2,3&4 ல் நமது வங்கி கணக்கில் வழங்கப்பட்ட  ஊதியம் (credited pay) மற்றும் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருமான வரி தொகை (Amount of Tax Deducted) , அரசு
ஊழியரின் வருமான வரி தொகையை மத்திய அரசின் கணக்கில் BIN (Book Identification Number) அல்லது CIN (Challan Identification Number) வழியாக செலுத்தியதை Rule 31(1)(a) ன் Form -16 Part A உறுதிமொழி படிவம் , Part B நிதி ஆண்டில் வழங்கிய ஊதியம் மற்றும் வருமான வரி பிடித்தம் செய்த தொகை Annexure நமக்கு வழங்க வேண்டும். இதனுடன் Income Tax Return Form அதாவது ITR-V தர வேண்டும்....
நாம் எவ்வித பணமும் யாரிடமும் கொடுக்க தேவையில்லை...
பணம் கொடுக்காமல் இருந்தால் நமக்கு அலுவலர் கட்டாயம் Income Tax Return Form (ITR-V) வழங்கிவிடுவார்..... 
பின் சதுரங்க வேட்டை படம் மாதிரி நம் மனதை வசியப்படுத்தும் வார்த்தையாக அரசு ஊழியர்களே தாங்கள் ஏதேனும் வங்கியில் Loan பெற சென்றால் Form-16 கட்டாயம் தேவைப்படும். ஆகையால், Form-16 தேவைப்படுபவர்கள் ரூ.200 கொடுத்து வாங்கி கொள்ளுங்கள் என கூறும் நிலை தொடரும்.....
வருமான வரி தாக்கல் செய்யும் போதே Automatically generate
Form -16 ...... .                            
வருமான வரி பிடித்தம் செய்வது சம்பளம் வழங்கும் அலுவலரின் கடமை. Form-16 வழங்குவதும் Drawing Offer கடமை.
தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி வருமான வரி பிடித்தம் IT சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர்.
தங்களது ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து Form-16 ஐ சம்பளம் வழங்கும் அலுவலர் தர மறுத்தால் புகார் அளிக்கும் முகவரி
The Commissioner,
Income Tax (TDS) ,
7th Floor , New Block,
Aayakar Bhawan,
121, M.G.Road ,
Chennai-34.




5 Comments:

  1. Thanks a lot for ur kind information!!

    ReplyDelete
  2. Form 16 koduppathu mattume ddo work itr v koduppathu avanga work ilA

    ReplyDelete
    Replies
    1. yes ITR V individual's work
      HM not responsible for this

      Delete
    2. yes ITR V individual's work
      HM not responsible for this

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive