****************************** ***
அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம்
மிஞ்சி பேசி மாய்ந்த சோகம்
உயிர்வதைய இறுதிவரை நிலைத்த தியாகம்
ரத்தமும் சதையுமாய் உறவிழந்து கதறிய கண்ணீர்கோலம்
இவைகள்
மொத்தத்திற்குமான முற்றுப்புள்ளி
வீர சுதந்திரம்
உரிமைகள் தொலைத்து
உயிர் பல கொடுத்து
போராடி கண்ட பெருவிழா
நம் ஒவ்வொருவருக்குமான திருவிழா
எத்தனை எத்தனை தடியடிகள்
எண்ணிலடங்கா கசையடிகள்
இப்படித்தான் கழிந்தன பலநொடிகள்
அதை நொறுக்கிக் கண்ட பொன் விடியல்
உயிர் இனிக்கும் இந்த சுதந்திரப்படையல்
வரி மறுத்து
மேலை உடை வெறுத்து
செக்கிழுத்து உயிர்சிதைந்து
துயர் பல தாண்டி பெற்ற உயிர்
தழைத்து நிற்குமிந்த
சுதந்திரப் பயிர்
முன்னோர்தம் தியாகம் அறிவோம்
அவர்களின்றி ஏது இந்த அளவிடற்கரிய ஆனந்தம்?
அவர்களால்
இன்று தேசம் நமக்குச் சொந்தம்
அடிமை விலங்கினைப் பொடிப்பொடியாக்கிய வீர மறவர்க்கு
நெஞ்சு நிமிர்த்தி அடிப்போம்
ஒரு ராயல் சல்யூட்
உதிரம் தந்து உவகை நல்கிய மறவர்களை நெஞ்சில் சுமப்போம்
வீசும் காற்றில் அசையும் கொடியினில் சுதந்திரம் உணர்வோம்
பாரத பூமியின் புதல்வர்கள் நாமும் தேசம் உச்சம் காண சூளுரைப்போம்
சுடரொளி பரவ சுகித்திருப்போம்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்-632515.
வேலூர் மாவட்டம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...