இப்போது தமிழ்நாடு முழுவதும் சாதாரண ரேஷன் கார்டுகள்
மாற்றப்பட்டு, மிகச் சிறிய ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட, ஒரு கோடியை 96 லட்சம் ரேஷன் அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. தற்சமயம் இதன் அடிப்படையில் தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது.
பயோமெட்ரிக் ரேஷன்
விரைவில் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு,பயோமெட்ரிக் ரேஷன் முறை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே, பொருட்களை வாங்க முடியும் என்று ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
குறிப்பாக பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். மேலும் ஆதார் அடிப்படையில்
ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே அனைவரது கைவிரல் ரேகையும் அரசு வசம் உள்ளது. எனவே ஸமார்ட்
கார்டில், பெயர் இடம்பெற்றுள்வர்களில் ஒருவரது கைவிரல் ரேகை பதிந்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு ஆதார் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதால், அனைவரது கைவிரல் ரேகையும், பயோமெட்ரிக் கருவி மூலம்
சரிபார்க்கமுடியும், பின்பு தவறான நபர்களுக்கு ரேஷன் பொருள் சென்றடைவது முற்றிலும் தடுக்கப்படும்.
பயோமெட்ரிக்
இப்போது தான் பயோமெட்ரிக் கருவிகள் கொள்முதல் பணிகள் துவங்கியுள்ளன, எனினும் செப்டம்பர் மாதம் இறுதியில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்படும் என பொதுவினியோகத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...