Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகம் முழுவதும் டோல்கேட் கட்டணம் அதிரடி உயர்வு - புதிய கட்டணம் எவ்வளவு?




தமிழகம் முழுவதும் உள்ள  21 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
வரும்  செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில்  தேசிய நெடுஞ்சாலைகளில் 462 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில்,  தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த  சுங்கச்சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள்
ஆணைய ஒப்பந்தப்படி 1992ம்  ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட  சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்த  சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு முறை  10 சதவீதம் முதல் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டு  வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 20  சுங்கச்சாவடிகளில்
கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், வரும்  செப்டம்பர் 1ம் தேதி முதல் மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம்  உயர்த்தப்படுகிறது. அதன்படி நல்லூர் (திருவள்ளூர்), கொடைரோடு(திண்டுக்கல்),  வேலஞ்செட்டியூர் (கரூர்),
பாளையம் (தர்மபுரி), விஜயமங்கலம்(குமாரபாளையம்),  புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம்  (நாமக்கல்), ஓமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்)  ,மேட்டூர்பட்டி (சேலம்), பரனூர் (காஞ்சிபுரம்்),
அதூர் (செங்கல்பட்டு), 
வல்லவன்கோட்டை(தஞ்சாவூர்), விக்கிரவாண்டி (விழுப்புரம்), புதுக்கோட்டை  (தூத்துக்குடி),பொன்னம்பலப்பட்டி (திருச்சி), திருமாந்துரை (விழுப்புரம்),  நெமிலி (பெரும்பதூர்) உட்பட 21 சுங்கசாவடிகளுக்கு கட்டணம்  உயர்த்தப்படுகிறது.
 இது குறித்து தேசிய ெநடுஞ்சாலை ஆணைய   அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் 15 சதவீதம்  வரை   சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கார், இலகு ரக   வானகங்களுக்க 5
சதவீதமும், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு 10 சதவீதமும்   கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம்  தேதி  முதல் அமலுக்கு வருகிறது’ என்றார்.
சென்னை முதல் குமரி வரை: சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் பஸ், லாரிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி...
சூரப்பட்டில் ₹185, தாம்பரம்-திண்டிவனம் சுங்கச்சாவடியில் ₹180, விக்கிரவாண்டியில் ₹280, பரனூர் ₹195, வானகரம் ₹135, பாடலூர் ₹175, பூதக்குடி ₹250, சிட்டாம்பட்டி ₹270, எட்டூர் வட்டம் ₹260, கப்பலூர் ₹125, மூன்றடைப்பு ₹230, சாலைப்புதூர்
₹310 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணம் எவ்வளவு?
* தேசிய  நெடுஞ்சாலையில் 72 கி.மீ நீளமுள்ள சாலைக்கு ஒரு தடவை செல்ல கார், ஜீப்,  வேன் ஆகிய வாகனங்களுக்கு ₹75லிருந்து ₹80 ஆகிறது.
* இலகு ரக வர்த்தக  வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினிபஸ் ஆகியவற்றுக்கு ₹135லிருந்து  ₹140ஆகிறது.
* லாரி, ஆம்னி பஸ்களுக்கு ₹270லிருந்து ₹280 ஆக அதிகரிப்பு.
* 3  ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ₹435லிருந்து ₹445 ஆகிறது.
* கனரக  வாகனங்களுக்கு ₹435ல் இருந்து  ₹445 ஆக அதிகரிப்பு. 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive