கருமத்தம்பட்டி: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் நேற்று பகல், 12:00 மணிககு, சூரியனைச் சுற்றி வானவில் போன்ற வட்டம் உருவானது. மெல்ல மெல்ல, வெள்ளை ஒளி பின்புலத்தில், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா போன்ற வண்ணங்களைக்கொண்டு வானவில் வட்டமாக மாறியது. அதுவரை சுள்ளென்று தகித்த சூரியவெப்பமும் சற்று குறைந்தது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:பொதுவாக அதிகப் பனி மூட்டங்கள் ஏற்படும் போது,நிலவை சுற்றி இந்த வட்டம் உருவாகும். அதை நாம், 'நிலா கோட்டை கட்டியது' என்போம். அதுவே பகலில், மெல்லிய மழைமேகங்கள் ஏற்படும்போது சூரியக்கதிர்கள், அவற்றில் ஊடுருவி இந்த வானவில் வட்டம் உருவாகும். இதை அறிவியலில், 'ரெயின்போ ஹாலோ' என்பர்.பனித்துளிகளில் பட்டு சூரிய ஒளிக்கதிர்கள் சிதறும்போதும், அதாவது குறிப்பிட்ட கோணத்தில் இவை நடந்தால், சூரியனைச் சுற்றி வானவில் வட்டம் உருவாகும். ஆண்டின் சில நாட்களில், சூரியன் இவ்வாறு காட்சியளிப்பதை பார்க்க முடியும். மற்றபடி, இதனால் வானியல் மாற்றங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தெரிந்த வானவில் வட்டம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» சூரியனைச்சுற்றி வானவில் வட்டம் : பொதுமக்கள் வியப்பு
சூரியனைச்சுற்றி வானவில் வட்டம் : பொதுமக்கள் வியப்பு
கருமத்தம்பட்டி: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் நேற்று பகல், 12:00 மணிககு, சூரியனைச் சுற்றி வானவில் போன்ற வட்டம் உருவானது. மெல்ல மெல்ல, வெள்ளை ஒளி பின்புலத்தில், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா போன்ற வண்ணங்களைக்கொண்டு வானவில் வட்டமாக மாறியது. அதுவரை சுள்ளென்று தகித்த சூரியவெப்பமும் சற்று குறைந்தது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:பொதுவாக அதிகப் பனி மூட்டங்கள் ஏற்படும் போது,நிலவை சுற்றி இந்த வட்டம் உருவாகும். அதை நாம், 'நிலா கோட்டை கட்டியது' என்போம். அதுவே பகலில், மெல்லிய மழைமேகங்கள் ஏற்படும்போது சூரியக்கதிர்கள், அவற்றில் ஊடுருவி இந்த வானவில் வட்டம் உருவாகும். இதை அறிவியலில், 'ரெயின்போ ஹாலோ' என்பர்.பனித்துளிகளில் பட்டு சூரிய ஒளிக்கதிர்கள் சிதறும்போதும், அதாவது குறிப்பிட்ட கோணத்தில் இவை நடந்தால், சூரியனைச் சுற்றி வானவில் வட்டம் உருவாகும். ஆண்டின் சில நாட்களில், சூரியன் இவ்வாறு காட்சியளிப்பதை பார்க்க முடியும். மற்றபடி, இதனால் வானியல் மாற்றங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தெரிந்த வானவில் வட்டம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
Beauty of nature
ReplyDelete