குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் ஆரம்ப
பள்ளி குழந்தைகளுக்கு, மைதானத்தில் பாடம் நடத்துவதால், மழை மற்றும்
குளிரில் பாதிக்கப்படுகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே,
வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தின் சார்பில் செயல்பட்டு வரும் ஆரம்ப
பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
சமச்சீர் கல்வி திட்டத்தில், இங்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
போதிய கட்டடங்கள் இல்லாமல், திறந்த வெளியில், குழந்தைகளை அமர வைத்து, பாடம்
நடத்தப்படுகிறது.
கன்டோன்மென்ட் வாரிய, முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் கூறுகையில், ''இடப் பற்றாக்குறை காரணமாக, குழந்தைகள் மைதானத்திலும், ஸ்டேடியத்திலும் அமர்ந்து, படிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் குளிரில், அவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
குன்னுார் மாவட்ட கல்வி அலுவலர் அமுதவல்லி
கூறுகையில், ''இரு வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு, திறந்த வெளியில்
பாடம் நடத்தப்படுகிறது. மழை காலங்களில் சிறுவர், சிறுமியர் பாதிக்க
வாய்ப்புள்ளது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண, கன்டோன்மென்ட்
அதிகாரிக்கு, கல்வி அலுவலகம் சார்பில், உடனே கடிதம் அனுப்பப்படும்,''
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...