அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாஸா,
முதல் முறையாக அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் வர்த்தக ரீதியிலான விண்வெளிப் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ள 9 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸூம் இடம் பெற்றுள்ளார்.இதுகுறித்து நாஸா அதிகாரிகள் கூறியதாவது:
எதிர்காலத்தில் நாஸாவின் வர்த்தக ரீதியிலான விண்வெளி ஆய்வுக் கலங்கள் அனைத்தும், ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் போயிங் ஸ்பேஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்ணில் ஏவப்படும்.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், போயிங் சிஎஸ்டி-100 ஸ்டார்லைனர் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் டிராகன்கேப்ஸ்யூல் மூலம் 8 நாஸா விஞ்ஞானிகளும், நாஸாவில் பணியாற்றிவிட்டு தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரும் விண்வெளிப் பயணம் மேற்கொள்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...