சமூக வலைதளத்தில் புதுச்சேரி வேதர்மேன் என்ற பக்கத்தில் வானிலை நிலவரம் பற்றி கூறியிருப்பதாவது:
20-08-2018 நேரம் மாலை 4:00 மணி நேற்று வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தற்பொழுது நிலப்பகுதியை அடைந்துள்ளது அதனை அவர் பதிவற்றம் செய்திருக்கும் செயற்கைகோள் படங்களின் வாயிலாக அறியலாம் மேலும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக நேற்று முதல் வடக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆங்காங்கே மிக கனத்த மழை பதிவாகி வருகிறது குறிப்பாக #மேற்குகோதாவரி (#WestGodavari) , #குண்டூர் (#Guntur) , #கிருஷ்ணா(#Krishna) மற்றும் #விஜயநகரம் (#Vizianagaram) மாவட்டங்களில் ஆங்காங்கே மிக கனத்த மழை பதவியாகியுள்ளது.
இன்று காலை பதிவான மழை அளவுகளின் படி #மேற்குகோதாவரி (#WestGodavari) மாவட்டம் #கொய்டா (#Koida ) பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 388 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல அம்மாவட்டத்தின் #குகுனூர் (#Kukunoor) பகுதியில் 292 மி.மீ அளவு மழையும் #வேலையற்பாட் (#Velayarpad) பகுதியில் 288 மி.மீ அளவு மழையும் பதிவானது அதே போல தெலுங்கானா மாநிலத்திலும் (#B. KOTHAGUDEM) மற்றும் (#Khammam) மாவட்டங்களில் மிக கனத்த மழை பதிவானது #அஸ்வொரப்பேட்டை (#ASWARAOPETA) பகுதியில் 200 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவானது.
20-08-2018 ஆகிய இன்றும் வட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு குறிப்பாக #ஜகடல்பூர் (#Jagadalpur) , #நிஜாமாபாத் (#Nizamabad) , #சென்னூர்(#Chennnur) , #கம்மம்(#Khammam) மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு அதேபோல மத்தியபிரதேசம் மாநிலம் #ஜபால்பூர் (#Jabalpur) பகுதிகளிலும் இன்று கனத்த மழைக்கு வாய்ப்பு உண்டு இவை தவிர்த்து மஹாராஷ்டிர மாநில மேற்கு பகுதிகளான #நாண்டட்-வாகலா (#Nanded-Waghla) , #அகோலா (#Akola ),#அவுரங்காபாத் (#Aurangabad ),மத்தியப்பிரதேசம் மாநிலம் #Indore மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் கனமழை பதிவாகலாம்.
மேலும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகரும் என்பதால் நாளை குஜராத் மாநிலத்தில் ஆங்காங்கே கனத்த மழைக்கு வாய்ப்புகள் உண்டு.தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் 23-08-2018 அன்று அல்லது அதற்கு பிறகு வட கடலோர மாவட்டம் வட மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான வெப்பசலன மழைக்கு வியப்புகள் உண்டு.
20-08-2018 ஆகிய இன்று தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு புதுச்சேரி வேதர்மேன் என்ற தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...