சென்னை விமான நிலையத்தில் பயணிகள் சேவைக்குப் பரிசோதனை முறையில் இரண்டு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முதன்முறையாகச் சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 15) உள்நாட்டு வருகை மற்றும் புறப்பாடு பகுதியில் பயணிகள் சேவைக்காக இரண்டு ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. விமானம் புறப்படும் நேரம், தமிழகத்தின் சுற்றுலாத் தலங்கள் குறித்து ரோபோவிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால் முறையான தகவலைக் கேட்டுப் பெற முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரோபோவிடம் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட முடியும் என்றும், சில நாட்களுக்குப் பிறகு தமிழில் உரையாடும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...