மாத சம்பளம் பெறுவோர் உள்பட
தணிக்கைக்கு உட்படாத வகையைச் சேர்ந்தவர்கள் கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.கேரளத்துக்கு நீட்டிப்பு: மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்தோர
கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 15-ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளதாரர்கள் உள்ளிட்டோர் ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கை ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய கெடு நிர்ணயிக்கப்படும். வருமான வரிப் படிவங்கள் குறித்த அறிவிப்பில் ஏற்பட்ட தாமதம், வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) குறித்த தகவலை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...