தமிழக அரசால் அரசுப் பள்ளிகளில் சிறப்பு பாடங்களை
கற்பிக்க (ஓவியம் தையல்
இசை உடற்கல்வி) 2012 மார்ச் மாதம் பகுதி நேர ஆசிரியர்களாக சுமார் 16549
பேர் நியமிக்கப்பட்டனர் .இவர்களுக்கு ஆரம்பத்தில் தொகுப்பூதியமாக ரூ.5000
சம்பளம் வழங்கப்பட்டது பின்னர் 2014ல் ரூ.2000 உயர்த்தி ரூ.7000
வழங்கப்பட்டது . அதன் பின்னர் ஆகஸ்ட் 2017 முதல் தற்போது உள்ள கல்வித்துறை
அமைச்சர் மாண்புமிகு .செங்கோட்டையன் அவர்களால் ரூ.700 உயர்த்தி தற்போது
பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.7700 வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது வரை 7ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பகுதிநேர ஓவிய
ஆசிரியர்களாக பணியாற்றும் பல பேரிடம் சிறப்பு ஆசிரியர்களுக்கான
சான்றிதழே இல்லை என தெரிய வருகிறது... அதாவது ஒருவர் ஓவிய ஆசிரியராக
பணியாற்ற வேண்டுமானால் freehand outline and model drawing (higher grade)
முடித்து அதில் தேர்ச்சி பெற்று பின்னர் இவர்கள் தமிழக அரசால் நடத்தும் 3
மாத காலப் பயிற்சியான Technical teacher certificate course (TTC - தொழில்
நுட்ப ஆசிரியர்க்கான சான்றிதழ்) முடித்து இதில் தேர்ச்சி பெற்றவர்கள்
மட்டுமே எந்த ஒரு பள்ளிகளிலும் ஓவிய ஆசிரியராக பணியாற்ற முடியும்...
ஆனால் பல ஓவிய ஆசிரியர்கள் higher grade மட்டுமே முடித்து விட்டு அரசுப்
பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக இன்று வரை பணியாற்றுவது அரசுக்கு
தெரிந்தும்... கல்வித்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது முறையாக
கல்வித்தகுதி வைத்திருப்பவர்களிடம் மனச்சங்கடத்தையும் பெரிதும் பின்தங்கிய
நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் ... நடந்து முடிந்த
சிறப்பாசிரியர் தகுதித்தேர்விலும் பலர்க்கு போதுமான கல்விசான்று
இல்லாமலே தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அவர்கள் சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதும் அரசுக்கு நன்றாக
தெரியும்... ஆனால் அவர்களுக்கு அரசு அரசுப் பணி வழங்கப் போவதில்லை.
அதேபோல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தகுதியற்ற பகுதி நேர ஓவிய
ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் ... என Trb யையும் கல்வித்
துறையையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் இவண் -
குருசாமி பகுதிநேர ஓவிய ஆசிரியர் மதுரைRevision Exam 2025
Latest Updates
Home »
» சிறப்பு ஆசிரியர்க்கான சான்றிதழே இல்லாமல்அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ..கண்டு கொள்ளுமா ? கல்வித்துறை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...