புதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் நடந்தது..
புதுக்கோட்டை,ஆக.9: புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டைக்கு ஆய்வு அலுவலராக அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி அரசால் நியமிக்கப்பட்டிருந்தார்..அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆய்வு அலுவலரான அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது...

இக்கூட்டத்தில் ஆய்வு அலுவலரான இணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி மாவட்டத்தில. அமைந்துள்ள மொத்த பள்ளிகள் வகை வாரியான எண்ணிக்கை,1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி வாரியாக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை,மாவட்டத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை,பள்ளி மாணவர்கள் சேர்க்கை விபரம்,தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி (ஆர்.டி.ஐ) மாணவர்களின் சேர்க்கை விபரம்,நீதிமன்ற வழக்குகள் நிலுவை விவரங்கள்,அவற்றின் தற்போதைய நிலை பற்றிய விபரம்,கடந்த 2014 முதல் 2018 வரை மாவட்ட அளவில் பொதுத் தேர்வு முடிவுகள் விவரம்,கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்)யின் படி பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விபரம்,வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வை விவரம்,மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத திட்டங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள்..அதிகாரியின் ஆய்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி,அறந்தாங்கி( பொ) கு.திராவிடச் செல்வம்,இலுப்பூர் க.குணசேகரன் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..
முன்னதாக இலுப்பூர் கல்வி மாவட்டம் மாத்தூர் சிறப்பு அரசு மேல்நிலைப் பள்ளி,கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றையும் பின்பு புதுக்கோட்டை கல்வி மாவட்டம் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும் ஆய்வு அலுவலரான அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்..
படவிளக்கம்: புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கான ஆய்வு அலுவலரான அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய போது எடுத்த படம்..அருகில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...