Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்டர்நெட் சென்டரில் ரெடியாகும் ஆசிரியர்களின் ஊதிய பட்டியல்: தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி



அரசு ஆசிரியர்களின் ஊதியப் பட்டியல்கள் தனியார் கணினி மையங்களில் தயாரிப்பது தடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்து பொதுத் தேர்வு எழுதிய  மாணவ, மாணவியரின் விவரங்கள் தனியாருக்கு விற்கப்பட்ட சம்பவத்தில்  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பான சூழல்நிலையில், ஆசிரியர்களின் ஊதியப் பட்டியல் (சம்பளம்) தனியார் கணினி மையங்களில் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, ஆசிரியர்களின் ஊதியப்பட்டியலும் தனியார் கணினி மையங்களில் ைவத்துதான் தயாரிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிந்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியத்தில் மெத்தமான இருப்பது கவலை அளிக்கிறது. அதனால் இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,
‘ஆசிரியர்களின் சம்பள பில்கள் ஒரு சில தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிகளில் உள்ள கணினி இயக்குநர்கள் மூலம் இந்த பணிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது’ என்றார்.





3 Comments:

  1. கணிப்பொறியில் தான் அனைத்து வேலைகளும் என்று நிலை வந்த பிறகு கணிப்பொறியை இயக்குவதற்கு என்று இதுவரை யாரையும் நியமனம் செய்ய வில்லை. வருவாய்த்துறை வேலை, வேலைவாய்ப்பக வேலை.... என்று அனைத்து வேலைகளும் நடக்கும் இடம் பள்ளி என்றாகிவிட்டது. இப்பணியைச் செய்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுத்து பணிகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா? கல்வித்துறை அதிகாரிகள் கேட்கும் நாள்தோறும் பல்வேறு விவரங்கள் என்று பணிச்சுமை நாள்தோறும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை எனும் போது இந்த நெருக்கடிகளை சமாளிக்க தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர் என்பது உண்மை. ஒவ்வொரு பள்ளிக்கும் கணிப்பொறி இயக்குவதற்கு என்று தனியாக ஆட்களை நியமிப்பது தான் சிறந்த வழி! பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழுநேரமாகவும், வீட்டில் வந்தும் இந்த பணிச்சுமைகளை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களை கணிப்பொறி இயக்குபவர்களாகவும் நியமிக்கலாம். செய்யுமா அரசு? செய்யவேண்டியவற்றை செய்யாமல் பிறகு விசாரணை என்றால் எப்படி? நிறைய அலுவலகங்களில் ஆட்களே இல்லை. பிறகு என்னதான் செய்வார்கள்?

    ReplyDelete
  2. கணிப்பொறியில் தான் அனைத்து வேலைகளும் என்று நிலை வந்த பிறகு கணிப்பொறியை இயக்குவதற்கு என்று இதுவரை யாரையும் நியமனம் செய்ய வில்லை. வருவாய்த்துறை வேலை, வேலைவாய்ப்பக வேலை.... என்று அனைத்து வேலைகளும் நடக்கும் இடம் பள்ளி என்றாகிவிட்டது. இப்பணியைச் செய்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுத்து பணிகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா? கல்வித்துறை அதிகாரிகள் கேட்கும் நாள்தோறும் பல்வேறு விவரங்கள் என்று பணிச்சுமை நாள்தோறும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை எனும் போது இந்த நெருக்கடிகளை சமாளிக்க தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர் என்பது உண்மை. ஒவ்வொரு பள்ளிக்கும் கணிப்பொறி இயக்குவதற்கு என்று தனியாக ஆட்களை நியமிப்பது தான் சிறந்த வழி! பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழுநேரமாகவும், வீட்டில் வந்தும் இந்த பணிச்சுமைகளை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களை கணிப்பொறி இயக்குபவர்களாகவும் நியமிக்கலாம். செய்யுமா அரசு? செய்யவேண்டியவற்றை செய்யாமல் பிறகு விசாரணை என்றால் எப்படி? நிறைய அலுவலகங்களில் ஆட்களே இல்லை. பிறகு என்னதான் செய்வார்கள்?

    ReplyDelete
  3. கணிப்பொறியில் தான் அனைத்து வேலைகளும் என்று நிலை வந்த பிறகு கணிப்பொறியை இயக்குவதற்கு என்று இதுவரை யாரையும் நியமனம் செய்ய வில்லை. வருவாய்த்துறை வேலை, வேலைவாய்ப்பக வேலை.... என்று அனைத்து வேலைகளும் நடக்கும் இடம் பள்ளி என்றாகிவிட்டது. இப்பணியைச் செய்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுத்து பணிகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா? கல்வித்துறை அதிகாரிகள் கேட்கும் நாள்தோறும் பல்வேறு விவரங்கள் என்று பணிச்சுமை நாள்தோறும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை எனும் போது இந்த நெருக்கடிகளை சமாளிக்க தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர் என்பது உண்மை. ஒவ்வொரு பள்ளிக்கும் கணிப்பொறி இயக்குவதற்கு என்று தனியாக ஆட்களை நியமிப்பது தான் சிறந்த வழி! பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழுநேரமாகவும், வீட்டில் வந்தும் இந்த பணிச்சுமைகளை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களை கணிப்பொறி இயக்குபவர்களாகவும் நியமிக்கலாம். செய்யுமா அரசு? செய்யவேண்டியவற்றை செய்யாமல் பிறகு விசாரணை என்றால் எப்படி? நிறைய அலுவலகங்களில் ஆட்களே இல்லை. பிறகு என்னதான் செய்வார்கள்?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive