மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளமாநிலத்திற்கு
கூகுள் நிறுவனம் 7 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க உள்ளது. கேரளாவில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் கேரளாவில் கனமழை பெய்தது. அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 400 பேர் வரை பலியாயினர்.8.69 லட்சம் மக்கள் பாதிப்பிற்குள்ளாயினர். மாநிலம் முழுவதும் 2,787 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழகம் சார்பில் 10 கோடி நிதி உதவியும், தனிப்பட்ட நிறுவனங்கள் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் கோடிக்கான அளவில் நதி உதவி அளித்து வருகின்றன. மத்திய அரசு முதற்கட்ட நிதி உதவியாக ரூ.600 கோடி அளித்துள்ளது.
இந்நிலையில் தேடுதல் வலைதளமான கூகுள் நிறுவனம் ரூ.7 கோடி நிதி உதவியை அளிக்க உள்ளது. இது குறித்து இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவுக்கான கூகுள் நிறுவனத்தின் துணை தலைவர் ராஜன் ஆனந்தன் கூறுகையில் கேரள வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்காக ஒரு மில்லியன் அதாவது சுமார் 7 கோடி ரூபாய் நிதி உதவி அளிகப்படும். எனவும் கூகுள் கிரிசிஸ் ரெஸ்பான்பான்ஸ் குழு சார்பில் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவாதகவும் கூறினார்.
முன்னதாக ஆப்பிள் நிறுவனமும் கேரளாவுக்காக 7 கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: DINAMALAR
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...