திருவாரூர்: ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் க. மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவாரூரில் அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
ஆனால், தமிழக முதல்வா், ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் குறித்தும், தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் குறித்தும் அவதூறாக பேசி உள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து செப். 9-ஆம் தேதி சிறுவிடுப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. போராட்டத்திற்கு பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ. 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியா்கள் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...