திருக்குறள்
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
விளக்கம்:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
பழமொழி
Good and Bad are not due others
தீதும் நன்றும் பிறர் தர வாரா
இரண்டொழுக்க பண்பாடு
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...
2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை...
பொன்மொழி
சிந்தனை தான் உன்னைத் தூண்டி வேலை செய்ய வைக்கிற உந்து சக்தி. எனவே உன் மனதை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பி விடு.
- விவேகானந்தர்
பொதுஅறிவு
1.ஆந்திர பிரதேச முதலமைச்சர் யார்?
திரு . சந்திர பாபு நாயுடு
2.உலக சுற்றுலா தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?
செப்டம்பர் 27
English words and. Meanings
Library. நூல்நிலையம்
Literacy. கல்வியறிவு
Leprosy தொழுநோய்
Language மொழி
Luggage உடைமைகள்
நீதிக்கதை
அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.
தவளையைக் கண்ட தேள், “தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?” என்று கேட்டது.
"நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!", என்றது தவளை.
தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.
ஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்?
இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது.
தேள் தவளையின் முதுகில் கொட்டியது. அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.
தேள் தவளையைப் பார்த்து, "தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?" என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, "எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை" என்று சொன்னது தவளை.
ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை.
ஓகோ; அப்படியா? என்று கேட்ட தேள், மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.
கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது.
தேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.
தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது. தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.
நீதி:
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கேடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.
இன்றைய செய்திகள்
20.08.2018
* கேரளாவின் திரிச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு மீட்புப் பணிக்காக 32 மீனவர்கள் போலீஸாருடன் செல்கின்றனர்.
* முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் கேரளாவைப் போல் கோவாவும் பேரிடர் சேதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
* ஐ.நா. அமைப்பின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான், தனது 80 வயதில் காலமானார்.
கருப்பினத்தைச் சேர்ந்த முதல் ஐ.நா. பொதுச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்தோனேஷியா நாட்டில் ஜகார்தாவில் சனிக்கிழமை தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை வெண்கலப் பதக்கம் வென்றது. மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்.
* சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு ரோஜர் பெடரர், ஜோகோவிச், சிமோனா ஹலேப் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.
Today's Headlines
🌸Kerala:Prime Minister Narendra Modi, who undertook an aerial survey of some of the flooded areas, announced an interim assistance of Rs. 500 crore🌹
🌸 Pakistan:Pakistan’s new Prime Minister Imran Khan was sworn in at a ceremony here on Saturday, ushering in a new political era as the former cricket captain and World Cup hero officially took the reins of power🌹
🌸Chennai:Tamil Nadu government is planning a massive solar energy programme through setting up of grid-connected rooftop solar panels in government buildings.Ramanathapuram, Coimbatore and Salem have been chosen for rolling out pilot projects🌹
🌸Madurai:As part of the ongoing efforts to send relief materials to flood-affected Kerala, nine lorries carrying essential commodities worth Rs. 75.88 lakh were despatched from Madurai Collector’s office on Saturday🌹
🌸Sivagangai:The Tirupattur Forest Range Office has launched an awareness campaign to prevent hunting of spotted deer, hares, peafowl and migratory birds, protected under the Wildlife Protection Act🌷
🌸 Indonesia, Asian games:Indian players bags gold medal in wrestling and bronze medal in rifle shooting🎖
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...