இந்திய
ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம்
ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில் பயணத்தின்போது
எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி இறப்பவர்களுக்கும்,
படுகாயமடைபவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.1 மட்டும் காப்பீடு தொகையாக வசூலித்து வருகிறது. இணையதளம் மூலம் பெறப்படும் இ-டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது. ரெயில்வே கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு காப்பீடு கட்டண திட்டம் நடைமுறையில் இல்லை.
இந்தநிலையில் வருகிற 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்காக காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு பகுதி இடம்பெற்றிருக்கும். அதில் பயணிகள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
காப்பீடு செய்தவர்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.7.50 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...