ஆகஸ்ட் 9 - நாகசாகி தினம்
திருக்குறள்
குறள்:
நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
விளக்கம்:
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
பழமொழி
Think before you act
எண்ணித் துணிக கருமம்
இரண்டொழுக்க பண்பாடு
1.நான் எந்த சூழ்நிலையிலும் பிறர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன்.
2.பிறர் செய்யும் நற்செயலுக்கு மதிப்பு அளிப்பதுடன், அதனை தொடர்வேன்.
பொன்மொழி
வீரன் சாவதே இல்லை.
கோழை வாழ்வதே இல்லை.
-கருணாநிதி
பொதுஅறிவு
1.போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்?
டாக்டர் .ஜோன்ஸ் சால்க்
2.இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? சத்யேந்திரநாத் தாகூர்
English words and. Meanings
Feel------ உணர்தல்
Fuel-------- எரிப்பொருள்
Fear ------ பயம்
Fierce -----கொடிய
Forget ------மறந்துவிடு
நீதிக்கதை
விதை – விழியன்
_சிறார் கதை_
”அம்மா, இங்க வெச்சிருந்த கவரை காணோம். வதனிக்கு செய்து வெச்ச கிஃப்ட்மா அது”. மதினி கத்திக்கொண்டு இருந்தாள். அவள் தன் தோழி வதனிக்கு செய்து வைத்த பரிசுப்பொருளை காணவில்லை. மேஜை மீது தான் வைத்திருந்தாள். அம்மா அங்கே தான் இருக்கும் எனச் சொல்லிக்கொண்டிருந்தார். கிடைக்கவில்லை. “வெள்ளை கலர் கவரா?” என்றார் அரைமணி நேரம் பிறகு. ஆமாம் என்றால் மதினி. அச்சோ அதை குப்பை தொட்டியில் போட்ட நினைவு, கீழே இருந்ததால் தேவையில்லை என நினைத்தேன் என்றார் அம்மா.
குப்பைத்தொட்டியை நோக்கி ஓடினாள் மதினி. காலியாக இருந்தது. “ஆமா, காலையில எடுத்துட்டு போயிட்டு இருப்பார் முத்து”. முத்து இவர்கள் வீட்டில் தினமும் வந்து குப்பை அள்ளும் நபர். இரண்டாவது மாடியில் இருக்கும் மதினி வீட்டிற்கு வந்து குப்பைகளை எடுத்துச்செல்வார். அரசு வேலை தான். கீழே வரும்போதே ஒரு நீண்ண்ண்ட விசில் சத்தம் வரும்.
“அவருக்கு போன் போடுங்க, என் வெள்ளை கவர் இருக்கான்னு பார்க்க சொல்லுங்க” எனச் சொன்னாள் மதினி. அதெப்படி அவ்வளவு குப்பையில் உன் கவர் கிடைக்கும் கண்ணு? அதெல்லாம் சாத்தியம் இல்லை என்றார் அம்மா. இல்லை ஃபோன் செய்யுங்க என வலியுறுத்தினாள்.
“ஹலோ முத்து, இங்க ஒரு பிரச்சனைப்பா. குப்பைகூட மதினியோட ஒரு கவரும் வந்துடுச்சாம்….ஓ…சரி சரி..ஓகே” குப்பை வண்டியில் இருந்து ஒரு லாரியில் போட்டுவிடுவார்களாம். அந்த லாரியும் அங்கிருந்து போய்விட்டது எனச் சொல்லி இருக்கார். ஆனாலும் மதினி விடவில்லை. போனில் முத்துவை அழைக்கும் அளவிற்கு பழக்கம் வந்தது போன மழைக்காலத்தின் போது தான். அவருடைய வீடு மழை நீரில் மூழ்கிவிட இவர்கள் வீட்டு மொட்டைமாடியில் தான் மூன்று நாட்கள் தங்கினார். இரவில் மட்டும் மொட்டை மாடியில் உறங்கினார். சில சமயம் மதினி வீட்டில் சாப்பாடு சாப்பிடுவார். நல்லவேளை அவர் மனைவி அப்போது ஊருக்கு போய் இருந்தார். ஆந்திராவில் இருந்து வந்தாலும் நல்ல தமிழ் பேசுவார்.
ஃபோன் செய்து வீட்டிற்கே வரவழைக்கப்பட்டார் முத்து. “என்னக்கா ஏதாச்சும் கோல்ட் இல்லை நகை இருந்துச்சா கவர்ல” எனக் கேட்டுக்கொண்டே வந்தார். இல்லை மதினி தன் தோழிக்கு வரைத்த ஓவியமும் சின்ன பரிசு பொருளும் இருந்தது என்றார் அம்மா. அந்த லாரி எங்கிருந்தாலும் போய் பார்க்கலாம் மாமா என்றாள் மதினி. சரி வா தன் வண்டியில் போய் காட்டுகின்றேன், கிடைத்தால் அதிர்ஷ்டம் என்றார். மாடியில் இருந்து இறங்கும்போது வதனியும் எதிர்பட்டாள். அவளும் வருகின்றேன் என்று கூற மூவரும் அவருடைய இருசக்கர வாகனத்தில் லாரியை தேடிச் சென்றனர். “மூனு பேரு எல்லாம் வண்டியில போவது தப்புமா. நீங்க குட்டி பசங்க அதனால ஓகே” எனச் சென்றார்.
லாரி அங்கிருந்து சென்றுவிட்டு இருந்தது. தினமும் இரண்டு லோடு அடிக்குமாம். ஊருக்கு வெளியே இருக்கும் குப்பைக் கிடங்கில் எல்லா குப்பையும் கொட்டப்படும். அங்கே போகலாம் என மதினி சொன்னதால் வண்டியை குப்பைக் கிடங்கு பக்கம் திருப்பினார். அதனை நெருங்கும்போதே வாடை வந்தது. பயங்கர வாடை. மலைப்போல குப்பை குவிந்து இருந்தது. போய்விடலாம் என குழந்தை சொல்லவே, வண்டியை திருப்பி கொஞ்ச தூரம் இருந்த ஒரு டீக்கடையில் நிறுத்தினார். மூக்கை பிடித்தபடியே “இவ்வளவு குப்பையா?” என்றாள் வதனி. “ஆமாம் தினமும் ஆயிரம் டன்னிற்கு மேலே வருது. இங்க லட்ச டன் குப்பை இருக்கும். நாங்க குப்பையை வீட்டில இருந்து எடுத்து வந்து முடிஞ்ச அளவு மக்கும் குப்பை மக்கா குப்பைன்னு பிரிச்சு லாரியில ஏத்துவோம். அந்த லாரி இங்க வந்து குப்பை கொட்டும். இதை ஏதாச்சும் செய்யனும். வருஷக்கணக்கா அப்படியே இருக்கு. குப்பைக்கு நடுவுல ப்ளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் இது மக்கவும் செய்யாது அப்படியே மலை போல குவிஞ்சு இருக்கு”
முத்துவின் ஃபோன் அடித்தது. “ஓ அப்படியா? ஒரு கால்மணி நேரத்தில் வரேன்” என அழைப்பை வைத்தார். “பசங்களா ஒரு வேலை வந்துடுச்சு. வேகமா வீட்டுக்கு போகலாம் வாங்க” என்றார். வீட்டினை அடையும் முன்னர் மதினியின் அம்மாவே வழியில் வந்தார்.
“என்னம்மா கவர் கிடைச்சதா?”
மூவரும் சிரித்தனர். “அக்கா, அதெல்லாம் கிடைக்காது. வீட்ல மனைவிக்கு வலி வந்துடுச்சாம் நான் அவசரமா ஆஸ்பத்திரி போகனும். பசங்கள இங்கயே இறக்கி விடவா?”
“சரி சரி நீ போ. இதோ கடைக்கு தான் போறேன்”
“கையில எதுவும் பை இல்லையே”
“கடையில கவர் தருவாங்க”
தன் பைக் கவருக்கு உள்ளே இருந்து துணிப் பையை எடுத்து “இந்தாங்க, பொருள் எல்லாம் வாங்கி இந்த பைல போட்டுகோங்க. ப்ளாஸ்டிக் கவர் வேணாமே. பையை நாளைக்கு வாங்கிக்குறேன்” எனச் சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினார்.
“இன்னைக்கு என்ன பாடம் கத்துகிட்டீங்க பசங்களா?. கவரை பத்திரமா வைக்கனும்னு புரிஞ்சுதா?” இருவரும் பதில் சொல்லவில்லை
ஆனால் இருவரும் வேறு வேறு மாதிரி தன் டைரியில் எழுதி இருந்தார்கள்
வதனி – “முத்து மாமாவுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும்”
மதினி – “குழப்பமா இருக்கு. ஏன் இவ்வளவு குப்பை. நாம் குப்பையை குறைக்க முடியுமா? பெருசாகிட்டு இந்த குப்பையை எப்படி திரும்ப பயன்படுத்தலாம்னு கண்டுபிடிக்கணும். இப்போதைக்கு குறைந்த ப்ளாஸ்டிக்கை மட்டும் பயன்படுத்துவேன்”
- விழியன்
இன்றைய செய்திகள்
09.08.2018
* முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முப்படை வீரர்களின் மரியாதையுடன் மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
* திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒருநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
* பெப்ஸி கோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பொறுப்பில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி (62) விலக இருக்கிறார். சுமார் 12 ஆண்டுகளாக அவர் இப்பொறுப்பில் இருந்தார்.
* வரும் 2020 ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறை பின்பற்றப்பட உள்ளது.
* தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான நட்புரீதியிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Today's Headlines
🌸🌸Our former chief minister Dr.M Karunanidhi, radical wordsmith death shooked up Indian politics.He leaves behind the distinct legacy of a leader who played the dual role of artist and statesman for the longest time in Indian politics.🌹
🌸South Africa-A fought hard but stumbled at the last hurdle to lose the first ‘Test’ against India-A by an innings and 30 runs at the Chinnaswamy Stadium on Tuesday.🌹
🌸Nasa has named the astronauts who will fly the first missions into space on commercially provided rockets and capsules, starting next year.
The nine individuals will go up on systems developed by - and contracted from - the Boeing and SpaceX firms.🌹
Prepared by
Covai women ICT_போதிமரம்
Excellent jop sir
ReplyDelete