Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 06.08.2018

ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா தினம்


திருக்குறள்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

விளக்கம்:

பலரும் கேட்டு வெறுக்க, பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

பழமொழி

East or west home is the best

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்.

இரண்டொழுக்க பண்பாடு

1.நான் எந்த சூழ்நிலையிலும் பிறர்      பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன்.

2.பிறர் செய்யும் நற்செயலுக்கு மதிப்பு அளிப்பதுடன், அதனை தொடர்வேன்.

 பொன்மொழி

வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். காரணம் வெற்றி சிரிக்க வைக்கும் 😃தோல்வி சிந்திக்க வைக்கும்🤔

          -விவேகானந்தர்.

பொதுஅறிவு

1.உலக வன தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?

மார்ச் 21

2.தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் யார்?
     
திரு.எம்.மாலிக்  பெரோஸ்கான்
       
English words and. Meanings

Disclose--வெளிப்படுத்து
Discipline---ஒழுக்கம்
Dispose------அப்புறப்படுத்துதல்
Desert -------பாலைவனம்
Decades---- பத்தாண்டுகள்

நீதிக்கதை

ஓநாயும் ஆட்டு குட்டியும்- ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை.

அதை தன் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய். ""ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?'' என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது.

""நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்!'' என்று மெல்லிய குரலில் கேட்டது.

""பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் பாட்டன் கலக்கியிருப்பான். உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது!'' என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது.

துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மவுனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.

இன்றைய செய்திகள்

06.08.2018

* பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள்  மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு  திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

* சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி விஜயா கே தஹில்ரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாஸா, முதல் முறையாக அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் வர்த்தக ரீதியிலான விண்வெளிப் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ள 9 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸூம் இடம் பெற்றுள்ளார்.

* ஆசிரியர் அல்லாத பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலகங்களில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிவோருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

* உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து 2-ஆவது முறையாக வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

Today's Headlines

🌸Jakarta, Indonesia: A major earthquake rocked Indonesia's Lombok island Sunday, just a week after a quake had killed 17 people on the holiday island, sending people running from their homes and triggering a tsunami alert.
🌸New Delhi, incensed by Washington's refusal to exempt it from new tariffs, decided in June to raise import tax from August 4 on some U.S. products, including almonds, walnuts and apples, and later delayed the move.
🌸The Forest Department will conduct an impact study on the efforts being taken to rejuvenate river Noyyal under the ongoing Noyyal Rejuvenation Programme, a Nabard funded-initiative.
The study will assess the volume of water percolating into the ground through the trenches dug up alongside 32 streams that are connected to the Noyyal and the amount of silt the streams carry into the river.
🌸Astronomers using the National Science Foundation's Karl G. Jansky Very Large Array (VLA) have made the first radio-telescope detection of a planetary-mass object beyond our Solar System. The object, about a dozen times more massive than Jupiter, is a surprisingly strong magnetic powerhouse and a "rogue," traveling through space unaccompanied by any parent star.
🌸 Chennai:Maharashtra aquathelets Dominated u16
Phace of national aquathalon individual group  Championship which conducted here on sunday💐💐

Prepared by
Covai women ICT_போதிமரம்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive