டிஎன்பிஎஸ்சி
நடத்தும் அரசு தேர்வு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க நிர்வாகம் முடிவு
செய்துள்ளது.
மேலும் ஆன்லைனில் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த
முடிவால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மாநில அளவில்
நிர்வாகத்தில் மாவட்ட துணை கலெக்டர், காவல்துறை துணை
கண்காணிப்பாளர்(டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்,
மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி
அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியையும், குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ.,
உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது.
முதலில் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு
வந்தது. அந்த முறை மாற்றப்பட்டு ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வுக்கு
விண்ணப்பிக்கும் புதிய முறை கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து
தேர்வுகளும் ஓஎம்ஆர் தாளில் கொள்குறி (டிக் அடிக்கும் முறை) வகையில்
தேர்வர்கள் எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிரடியாக எழுத்து தேர்வை கணினி மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி
திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சியில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக
இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேர்வு நடத்தும் பணிகளை தனியாரிடம்
அளிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.
கணினி மூலம் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துவதற்காக தனியாரிடம் ஒப்பந்த
புள்ளியை டிஎன்பிஎஸ்சி கோரியுள்ளது. ஒப்பந்தபுள்ளியை ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 3
மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். டெண்டர் குறித்த விவரங்களை
www.tenders.tn.gov.in, www.tnpsc.gov.inல் தெரிந்து கொள்ளலாம் என்றும்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்புக்கு தேர்வு எழுதுவோர் மற்றும்
கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு
எழுதுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்விலும் அதிகரித்து வருகிறது.
குறைந்தப்பட்சம் ஒவ்வொரு தேர்வுக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்
விண்ணப்பித்து வருகின்றனர்.ஒரு பதவிக்கே சுமார் 250 பேர் போட்டியிடும் சூழ்நிலை நிலவி வருகிறது.
எப்படியாவது அரசு பணியை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணமே ஒவ்வொரு
தேர்வுக்கும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காட்டி
வருகிறது. இந்த நிலையில் தனியாரிடம் ஒப்படைப்பது முறைகேடுக்கு வழிக்கும்.
அப்படி தனியாரிடம் ஒப்படைத்தால் தேர்வு எழுதி அரசு பதவியை பெற
நினைப்பவர்களின் எண்ணம் கானல் நீராக போய் விடும் என்றும் சமூக ஆர்வலர்கள்,
தேர்வு எழுதுபவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தேர்வு நடத்தும் பணியை
தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு அவர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கல்: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் 20
முதல் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கம்
ெகாண்டவர்கள். கிராமங்கள், புறநகர்களில் இந்த வசதி இல்லை. எனவே, கிராமப்புற
மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் இதற்காக பல ஆயிரங்களை செலவழித்து தேர்வு
எழுத வேண்டியிருக்கும். காரணம் சில நூறு ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கவே
முடியாதநிலையில்தான் பல மாணவர்கள் தேர்வில் தோல்வி தழுவும் அவல நிலை
ஏற்பட்டுள்ளது. முழு அளவில் கம்ப்யூட்டர் அறிவு இல்லாத மாநிலமான
தமிழகத்தில் இதுபோன்ற திடீர் அறிவிப்புகள் மாணவர்கள், தேர்வர்கள்,
போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
என்ன விபரீதம் நடக்கும்?
வட மாநிலங்களில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினா தாள்கள் நெட்
சென்டர்களில் சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசு
பணிகளான ரயில்வே, ஐசிஎப், தபால் துறை பணிகளுக்கான வினாத்தாள்கள் ெடல்லியில்
உள்ள சில இன்டர்நெட் சென்டர்களில் விற்கப்படுகிறது. சமீபத்தில் கூட
சென்னையில் நடந்த தபால் துறை தேர்வில் பீகார் மாணவர்கள் தமிழில் 100 சதவித
மதிப்பெண் ெபற்றனர்.
ஆனால் தமிழகத்தை சேர்ந்த தமிழை தாய் மொழியாக கொண்ட தேர்வர்களால் இந்த
மதிப்பெண்ணை பெற முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் சில தனியார் இன்டர்நெட்
மையங்கள் ேதர்வு நடத்தும் மையங்களில் உள்ள ஊழியர்களிடம் ரகசிய கூட்டணி
வைத்து வினாத்தாள்களை லீக் செய்வதுதான். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வை
ஆன்லைன் மூலம் நடத்த தனியாரிடம் ஒப்படைத்தால் வினாத்தாள் எளிதாக
லீக்காகும் வாய்ப்பு உள்ளது.
தமிழக தேர்வுமுறைகளில் மக்களிடம் சிறப்பாக இடம்பெற்றுள்ள ஒரே தேர்வு முறை TNPSC தான் ஏனென்றால் இப்போதுதான் ஊழல் இல்லாமல் திறமை உள்ளவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வுசெய்கிறார்கள்
ReplyDeleteஇப்பொழுது இந்த புதியமுறையால் மக்கள் கலக்கம் மற்றும் நம்பிக்கையை இழந்துள்ளனர் தயவு செய்து இந்த முறையை கைவிடவேண்டும் . அப்போதுதான் இந்த துறையும் நல்லா இருக்கும்!!!!!