“அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:மத்திய
அரசு எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு
முறையை கட்டாயமாக்கியது. தற்போது தமிழக அரசு ஆசிரியர் பணிக்கு தகுதித்
தேர்வை தனியாகவும், பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித்தேர்வை தனியாகவும்
நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதனை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் வயது, பதிவு செய்த நாள் ஆகியவற்றில் முன்னுரிமை அளித்து அதற்கேற்ப பணி வழங்கினால் நல்லது. அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ளவற்றையே பின்பற்ற வேண்டுமே தவிர இரு தேர்வு முறையை அமல்படுத்தக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...