பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
பழமொழி :
A friend in need is a friend indeed
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
பொன்மொழி:
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை
மேற்கொள்கிறான். -ஜான்மில்டன்.
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
2.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்
நீதிக்கதை :
வெட்டுக்கிளியும் ஆந்தையும்
(The Owl and the Grasshopper)
5 முதல் 38 கி.மீ.
2.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்
நீதிக்கதை :
வெட்டுக்கிளியும் ஆந்தையும்
(The Owl and the Grasshopper)
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதிய வேளையில் மரப்பொந்து ஒன்றில் அந்த ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் புல்தரையின் கீழே வெட்டுக்கிளி ஒன்று பாட்டுப் பாடிக்கொண்டே வந்தது. வெட்டுக்கிளியின் அந்த பாட்டுச்சத்தம் ஆந்தையின் தூக்கத்தை கெடுத்தது. உடனே ஆந்தை அந்த வெட்டுக்கிளியிடம், "கொஞ்சம் பாடுவதை நிறுத்து" என்று கேட்டது.
வெட்டுக்கிளியோ அதை கேட்காமல் அந்த மரத்தின் கீழே பாடிக்கொண்டிருந்தது. மேலும் ஆந்தையைப் பார்த்து, "நீ கண் தெரியாத குருட்டு பறவை! பகலில் வருவது கிடையாது, எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்" என்று திட்டியது.
தினமும் ஒரே மாதிரியான உணவினை சாபிட்டுவந்த ஆந்தைக்கு அந்த வெட்டுக்கிளி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து.
"நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ. ஆனால் விழித்துக் கொண்டிருபவர் களுக்கு இனிமையாய் இருக்கும் பொருட்டு உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! உன் சங்கீதம் இனிமையானது. அதை அதை இன்னும் மெருகேற்ற என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது. அந்த அமிர்தத்தை இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும். மேலே வா தருகிறேன்”, என்றது ஆந்தை.
ஆந்தையின் நயவஞ்சக பேச்சைக் கேட்டு மயங்கிய வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் அருகில் சென்றது.
அருகில் வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.
நீதி: பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது.
இன்றைய செய்தி துளிகள் :
1. முறையாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு - உ.பி அரசு அதிரடி!
2.வர்தா புயலில் விழுந்த மரங்களை ஈடுசெய்ய 23 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி ஆகஸ்ட் மாதம் தொடக்கம்.
3.ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த வலியுறுத்தல்:பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை
4.தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் அறிக்கை
5.டி-20 போட்டியில் 2,000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா
6.ஜிம்னாஸ்டிக் உலக சேலஞ்ச் கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...