வங்கிகளின் 'ருபே கார்டு' பெற்றவர்கள் 90 நாட்களுக்கு ஒரு முறையாவது ஏ.டி.எம்., பயன்படுத்தினால் தான், ரூ.ஒரு லட்சம் இன்சூரன்ஸ் திட்டம் கார்டுதாரர்களுக்கு பயன்படும்.
பிரதமரின், 'தன் ஜன் யோஜனா' திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ஒரு வங்கி கணக்கு திட்டம் உள்ளது. இதில் டெபாசிட் இன்றி சேமிப்பு கணக்கு துவங்கலாம். நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கும் வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு, 'ருபே கார்டு' வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு இல்லை
இந்த கார்டில் விபத்து பாலிசியாக ரூ.ஒரு லட்சம் இணைக்கப்பட்டுள்ளது. கார்டு வைத்திருப்பவர் விபத்தில் இறந்தால் வங்கிக் கணக்கு உள்ள கிளைக்கு சென்று, படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் ரூ.ஒரு லட்சம் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். விபத்தில் நிரந்தர உறுப்புகள் இழப்பு, செயலிழப்பு ஏற்பட்டால் அதற்குரிய தொகையும் வழங்கப்படும்.
வங்கியில் வரவு, செலவு செய்யாமல் 'ருபே கார்டு' வைத்திருந்தாலும் இன்சூரன்ஸ் உண்டு. அத்தகைய கார்டுதாரர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை ஏ.டி.எம்., இயந்திரத்தில் கார்டை மட்டும் செருகி எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
கிராமப்புறங்களில் வங்கி இல்லாத இடங்களில் வங்கித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் உள்ள சிறிய இயந்திரத்தில் 'ருபே கார்டை' செருகி எடுத்தாலும், கார்டு நடைமுறையில் இருக்கும். இதுகுறித்து வங்கிகளும், வங்கித் தொடர்பாளர்களும் கார்டுதாரர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இதனால் மத்திய அரசு தற்போது 90 நாட்களுக்கு ஒருமுறையாவது கார்டை ஏ.டி.எம்.,மில் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. 'ருபே கார்டு' வைத்திருக்கும் அனைவருக்குமே இன்சூரன்ஸ் திட்டம் பொருந்தும் என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...