எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு,
நேற்று கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் துவங்கியது.அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில், எம்.பி.ஏ.,- எம்.சி.ஏ., பாடப்பிரிவில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று துவங்கியுள்ளது.
முதல் கட்டமாக, எம்.சி.ஏ., படிப்புக்கு, 28ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக, எம்.பி.ஏ., படிப்புக்கு 29ம் தேதி முதல், ஆக., 4ம் தேதி வரையும்சேர்க்கை கலந்தாய்வு நடக்கும்.முதல் நாளான நேற்று, சிறப்பு பிரிவில் அழைக்கப்பட்டிருந்த மூன்று பேரும், தங்கள் விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்தனர். இன்று துவங்கவுள்ள, எம்.சி.ஏ., பொது கலந்தாய்விற்கு, 666 பேர் தரவரிசை பட்டியல்படி அழைக்கப்பட்டுள்ளனர்.கோவை அரசு தொழில்நுட்பக்கல்லுாரி முதல்வர் மற்றும் கலந்தாய்வு செயலர் தாமரை கூறுகையில், ''எம்.சி.ஏ., மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு இன்று துவங்குகிறது. மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்கவேண்டும். எம்.சி.ஏ., பிரிவில், 204 கல்லுாரிகளில், 10 ஆயிரத்து 665 இடங்கள் உள்ளன. எம்.பி.ஏ., பிரிவில், 320 கல்லுாரிகளில், 13 ஆயிரத்து 82 இடங்கள் உள்ளன. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், துணை கலந்தாய்வில் பங்கேற்கலாம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...