Google நிறுவனம் தொடர்ந்து புதிய
முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பாதுகாக்க புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளது, அதன்படிr வாடிக்கையாளர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதை நிறுத்துவதற்கு புதிய யுஎஸ்பி சாதனத்தை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.
டைட்டான் செக்யூரிட்டி கீ என்று அழைக்கப்படும் இந்த யுஎஸ்பி ப்ளூடூத் வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனங்களைப் பற்றிய
மற்ற சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ஆன்லைன் ஸ்டோர்
இந்த யுஎஸ்பி சாதனம் அடுத்த சில மாதங்களில் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனம் உங்கள் கூகுள் சார்ந்த அனைத்து கணக்குகளையும் பாதுகாப்பாக
பயன்படுத்துவதற்கு உதவும் என்று கூறப்படுகிறது.
பயன்படுத்துவதற்கு உதவும் என்று கூறப்படுகிறது.
டைட்டான் செக்யூரிட்டி கீ
இந்த டைட்டான் செக்யூரிட்டி கீ எப்படி பயன்படும் என்றால் உங்கள் ஜிமெயில் போன்ற கணக்குகளில் சைன்-இன்-செக்யூரிட்டி என்ற விருப்பம் இருக்கும், இதை தேர்வுசெய்து பின்பு start setup என்ற விருப்பத்தை கிளிக் செய்யவேண்டும். அடுத்தப் பகுதியில் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும், பின்பு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும். பின்பு பாதுகாப்பு சார்ந்த அனைத்து வழிமுறைகளையும் கொடுத்துவிட்டு உங்கள் கை விரல் ரேகையை
கொண்டு register செய்ய வேண்டும்.
கொண்டு register செய்ய வேண்டும்.
யூட்யூப்
அடுத்து கூகுளில் யூட்யூப் மற்றும் கூகுள் பிளஸ் போன்ற பல்வேறு கணக்குகளைr மிக எளிமையாகவும் பின்பு பாதுகாப்புடனும் இந்த சாதனத்தை கொண்டு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல்போன்:
உங்களது மொபைல் சாதனங்களிலும் இந்த டைட்டான் செக்யூரிட்டி கீ மிக எளிமையாக பயன்படுத்த முடியும், அதற்குதகுந்தபடி
ப்ளூடூத் விருப்பத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் 20 டாலர்களுக்கும் குறைவாகவே இருக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளூடூத் விருப்பத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் 20 டாலர்களுக்கும் குறைவாகவே இருக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...