தமிழக அரசு பாராளுமன்ற ஜனநாயக
விதிமீறலை கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசு ஊழியர்களிடமும் ஆசிரியர்களிடமும் பணிக்கொடை மறுப்பு என்ற பெயரில் நிகழ்த்தி வருவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.ஓய்வூதியத்திற்கும் பணிக்கொடைக்கும் வெவ்வேறு சட்டங்கள் :
ஓய்வு பெறும் அரசு ஊழியர் & ஆசிரியருக்கு ஓய்வூதியம் வழங்குவதைப் போன்று பணிக்கொடை வழங்கப்படுவதும் சட்டப்படியான உரிமையே. ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலுக்கும் பணிக்கொடை வழங்குவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை ஏனெனில் இவையிரண்டுமே வெவ்வேறான தொழிலாளர் நலச் சட்டங்கள்.
பணிக்கொடைச் சட்டம் (Payment of Gratuity Act 1972) :
ஊழியர்களின் ஓய்வின் போது கிடைக்கும் பணப் பலன்களில் பணிக் கொடை மிக முக்கியமான ஒன்றாகும்.
1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் நாளில் பாராளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட பணிக்கொடைச்சட்டம் அனைத்து வகையான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் உரிமையாக இருந்து வருகிறது.
இச்சட்டத்தின்படி 10 அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் / பணியாளர்கள் / ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர்களுக்கு பணிக்கொடை கிடைக்கும்.
இச்சட்டத்தின்படி 10 அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் / பணியாளர்கள் / ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர்களுக்கு பணிக்கொடை கிடைக்கும்.
இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கென பணிக்கொடை விதிகளை உருவாக்கி கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பணிக்கொடை வழங்கி வந்தன.
ஊழியர்களின் வயது முதிர்வு அல்லது இறப்பின் காரணமான ஓய்வின் போதோ / வேலையினை விட்டு விலகும்போதோ / நிரந்தர ஊனம் ஏற்பட்டு வேலையிழந்தாலோ அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் பணிக்கொடை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
ஊழியர்களின் வயது முதிர்வு அல்லது இறப்பின் காரணமான ஓய்வின் போதோ / வேலையினை விட்டு விலகும்போதோ / நிரந்தர ஊனம் ஏற்பட்டு வேலையிழந்தாலோ அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் பணிக்கொடை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
பணிக் காலத்தில் 1 ஆண்டிற்கு 15 நாட்கள் வீதம் அதிகபட்சமாக 16½ மாதங்கள் வரை பணிக்கொடைக்கான கணக்கீட்டுக் காலமாக எடுத்துக் கொள்ளப் படும்.
ஒருவர் கடைசியாகப் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் அவரின் மொத்த பணிக்கொடை கணக்கீட்டுக் காலத்திற்கு கணக்கீடு செய்யப்பட்டு பணிக்கொடை வழங்கப்படும்.
ஆரம்பத்தில் அதிகபட்ச பணிக்கொடை ரூ.1,00,000/- (ஒரு இலட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் அதிகபட்ச பணிக்கொடை ரூ.1,00,000/- (ஒரு இலட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.
இது தற்போதைய மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவில் அதிகபட்ச பணிக்கொடை ரூ.20,00,000/- (20 இலட்சம்) என நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மீறப்பட்ட பணிக்கொடைச் சட்டம் 1972 :
ஓய்வூதியத்திற்கும் பணிக்கொடைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் தொட்டே ஓய்வூதிய உரிமையோடே, பணிக்கொடைக்கான உரிமையும் சேர்த்து மறுக்கப்பட்டு இந்தியப் பணிக்கொடைச் சட்டம் (1972) மீறப்பட்டு வந்துள்ளது.
மக்களவையில் பணிக்கொடைக்கான பதில்:
மத்திய அரசில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்த வினாவிற்கு 5.12.2012-ல் மக்களவையில் மத்திய பணியாளர் நலன் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை இணையமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள், “புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இறப்பு மற்றும் ஓய்விற்கான பணிக்கொடை வழங்கப்படும் என்றும் அதற்கான உத்தரவு 05.05.2009-லேயே வெளியிடப்பட்டுள்ளது" என்றும் பதிலளித்தார்.
மத்திய குடிமைப்பணி பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972 .
26.08.2016 அன்று வெளியிடப்பட்ட மத்திய பணியாளர் நலன் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிக்கையிலும் (NO:7/5/2012 – P& PW (F) B) 01.01.2004 க்குப் பிறகு பணியேற்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய குடிமைப்பணி பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972-ன்படி பணிக்கொடை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் பணிக்கொடை உரிமையும் பறிப்பு:
01.04.2003 முதல் 20.04.2018 முடிய தமிழக அரசுப்பணியில் 5,07,233 ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் இதுவரை 8323 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் / மரணம் அடைந்துள்ளனர். ஆனால், இவர்கள் அனைவருக்குமே பணிக்கொடை வழங்கப்படாது மறுக்கப் பட்டுள்ளது.
பணிக்கொடைச் சட்டம்1972
*மத்திய குடிமைப்பணி பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972.
*05.05.2009-லேயே வெளியிடப் பட்ட பணிக்கொடை தொடர்பான உத்தரவு.
*பணியாளர் நலன் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை அலுவலக உத்தரவு.
*மத்திய பணியாளர் நலன் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை இணையமைச்சர் திரு.நாராயணசாமியின் மக்களவைப் பதில்
*உள்ளிட்டவை உள்ளங்கை நெல்லிக்கனியென இருந்தும் தமிழக அரசு தனது ஊழியர்களுக்குக்கு பணிக்கொடை வழங்காதது அரசு ஊழியர்களுக்குக்கு இழைக்கப்பட்ட மற்றுமொரு மாபெரும் அநீதியாகும்.
*ஆகவே, தமிழக அரசில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்த அறிவிப்பினை அரசு காலதாமதமின்றி வழங்கிட அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.
Yes
ReplyDelete