அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான,
காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு கால விடுமுறை மற்றும் பள்ளி திறக்கும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்ற பின், தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பிளஸ் 1க்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடக்கும் தேதிகள், பள்ளி துவங்கிய நாளே அறிவிக்கப்பட்டன.
தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகளும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டன.நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வுகள் தேதி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அனைத்து பள்ளிகளுக்கும், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் கையேட்டை அனுப்பியுள்ளார். இதில், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு கால அட்டவணைவகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு1 முதல் 8 வரை செப்.17 - 22 டிச.17 - 22 ஏப்., 10 - 189 முதல் பிளஸ் 2 வரை செப்.10 - 22 டிச.10 - 22 ஏப்., 8 - 18தேர்வு விடுமுறை செப்.23-அக்.2 டிச.23 - ஜன.1 ஏப்., 19 - ஜூன் 2
I received useful information. Thank you
ReplyDelete