''மத்திய அரசின், எத்தகைய தேர்வுகளையும் எதிர்கொள்ளும்
வகையில், புதிய பாடத்திட்டம் அமையவிருக்கிறது,'' என்று அமைச்சர்
செங்கோட்டையன் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அரசு பள்ளி கட்டட
திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
நிருபர்களிடம் கூறியதாவது:எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம்
அளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், கோபியில், 2,500 மாணவர்களுக்கு,
தணிக்கையாளர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய அரசின் ஜி.எஸ்.டி.,
புதிய வரி திட்டத்தின் மூலம், தமிழகத்தில், தகுதி வாய்ந்த தணிக்கையாளர்கள்
தேவைப்படுகின்றனர். அடுத்தாண்டு முதல், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1
வகுப்பு மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. அலைபேசி,
ஸ்மார்ட் கணினிகளிலும் பாட திட்டங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மத்திய
அரசின் எத்தகைய தேர்வுகளையும், மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில்,
பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும்,
ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...