தமிழகம்
முழுவதும் பள்ளிகளில், தினமும் வாசிப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும்' என,
பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, பள்ளி, மாணவ - மாணவியர் இடையே வாசிப்பை அதிகப்படுத்தும் வகையில், ஜூலை, 15 முதல், ஆகஸ்ட், 14 வரை, ஒரு மாதம் வாசிப்பு மாதமாக கொண்டாடப்படும்.
இந்த ஒரு மாதத்தில், தினமும் ஒவ்வொரு பள்ளியிலும், வாசிப்பு வகுப்பு என, நேரம் ஒதுக்க வேண்டும். இதற்கான புத்தகங்கள், ஒவ்வொரு பள்ளியின் அருகிலும் உள்ள பொது நுாலகத்தில் இருந்து வழங்கப்படும். நற்பண்புகள், நற்சிந்தனை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் புத்தகங்களை படிக்கும் வகையில், வாசிப்பு நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...