'பஸ்களில் எடுத்து செல்லப்படும் சரக்குகளுக்கும், இ - வே பில் கட்டாயம்' என, வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
நாடு முழுவதும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான சரக்குகளை,
மாநிலங்களுக்கு இடையே எடுத்து செல்ல, ஆன்லைன் வாயிலாக அனுமதி பெறும், 'இ -
வே பில்' நடைமுறை, ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. மாநிலங்களுக்குள், ஒரு
லட்சம் ரூபாய்க்கு மேலான சரக்குகளை எடுத்து செல்ல, 'இ - வே பில்' பெறுவது,
ஜூன் முதல் கட்டாயமாகிஉள்ளது. இந்நிலையில், பஸ்களில் சரக்கு எடுத்து
சென்றாலும், 'இ - வே பில்' பெறுவது கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: லாரிகளில்
சரக்குகளை எடுத்து சென்றால் மட்டுமே, 'இ - வே பில்' பெற வேண்டும்; பஸ்களில்
சரக்குகளை எடுத்து சென்றால், 'இ - வே பில்' தேவையில்லை என, சரக்குகளை
அனுப்புவோரும், நிறுவன உரிமையாளர்களும் நினைக்கின்றனர். இது, முற்றிலும்
தவறானது. லாரி, பஸ் என, எந்த வாகனத்தில் சரக்குகளை எடுத்து சென்றாலும், 'இ -
வே' பில் அவசியம்.பலர், 'இ - வே பில்' பெறாமல், சரக்குகளை பஸ்களில்
எடுத்து செல்வதாக புகார்கள் வருகின்றன. இது குறித்து, தொடர் கண்காணிப்பில்
ஈடுபட்டு வருகிறோம்.'இ - வே பில்' இன்றி, பஸ்களில் சரக்குகள் சிக்கினால்,
சரக்கின் மதிப்பை விட, அதிக அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள்
கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...