ராணுவத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கான முகாம்,
சேலத்தில், ஆக., 22 முதல், செப்., 2 வரை நடைபெற உள்ளது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற உள்ள முகாமில், நீலகிரி, தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், கோவை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த, இளைஞர்கள் பங்கேற்கலாம்.
ராணுவத்தில், பொதுப்பணி, தொழில் நுட்பம், கிளார்க், நர்ஸ் உட்பட பல்வேறு பணிகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் பங்கேற்க விரும்புவோர், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில், ஆக., 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுச்சீட்டு, ஆக., 10க்கு பின் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 0422 - 2222022 என்ற, எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...