புதுச்சேரியில் செயல்படுத்தப்படும்
மாணவர் பேருந்து திட்டம், இந்தியாவில் வேறெங்கும் இல்லாத முன்மாதிரி திட்டம்' என, சபநாயகர் கூறினார்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் எழுப்பிய கேள்வியில், 'ஒரு ரூபாய் கட்டண மாணவர் பேருந்துகள் எத்தனை இயக்கப்படுகின்றன.
அதற்கான செலவு தொகை எவ்வளவு' என கேட்டார்.அமைச்சர் கமலக்கண்ணன்: மொத்தம் இயக்கப்படும் 71 பஸ்களில், 67 தனியார் பஸ்கள் ஆகும். ஆண்டிற்கு ரூ.5 கோடி வாடகையாக தரப்படுகிறது.அன்பழகன்: தமிழகத்தைப்போல் மாணவர்களுக்கு பஸ் பாஸ் கொடுத்து அரசுப் பேருந்துகளில் செல்ல வைக்கலாமே.சபாநாயகர் வைத்திலிங்கம்: தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் செல்கின்றன.
புதுச்சேரியில் அதுபோல் இல்லை. இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், கொள்கை முடிவு எடுத்து மாணவர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத முன்மாதிரி திட்டம் இது.அமைச்சர் கமலக்கண்ணன்: இது நல்ல திட்டம். இதை செயல்படுத்தும் முறையில் தவறு இருந்தால் கூறுங்கள், மாற்றிக் கொள்ளலாம்.என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...