மத்தியப் பிரதேசத்தில் குப்பை
பொறுக்குபவரின் மகன் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் மாவட்டத்தில் விஜய்கஞ்ச் மண்டி எனப்படும் குடிசைகள் கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. வறுமைக்கோட்டுக்கு மிகவும் கீழே உள்ளவர்கள் வசிக்கும் இந்த பகுதியில் ரஞ்சித் சௌத்ரி மற்றும் மம்தா சௌத்ரி ஆகியோர் வசித்து வருகின்றனர். ரஞ்சித் ரெயில்வே லைன் ஓரமாக குப்பையில் கிடைக்கும் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பை சேகரித்து விற்று பிழைப்பு நடத்துகிறார்.
அந்தப் பகுதியில் உள்ள மிகவும் மோசமான வீடுகளில் அவர்கள் வீடும் ஒன்றாகும்.
குண்டும் குழியுமான தரை, வைக்கோல் மற்றும் பிளாஸ்டிக் தகடுகளால் வேயப்பட்ட கூரையுடன் உள்ள அந்த வீட்டில் வேகமாக காற்றடித்தால் கூறை பறந்து விடும் அபாயம் இன்னமும் உள்ளது. இந்த வீட்டில் இவர்களுடைய மகன் ஆஷாராம் சௌத்ரி என்னும் 20 வயது இளைஞரும் வசிக்கிறார்.
தனது ஏழ்மை நிலையிலும் கல்வியை கைவிடாத இவர் நவோதயா பள்ளியில் படித்து வருகிறார். தற்போது இவர் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மருத்துவம் படிக்க விரும்பும் இவர் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 707 ஆவது ரேங்க் எடுத்துள்ளார். இது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 141ஆவது ரேங்க் ஆகும். அத்துடன் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 2763 ஆவது இடத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வரிசையில் 803 ஆவது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஆஷாராம், "நான் சிறுவனாக இருந்த போது உடல்நலம் சரியில்லாததால் ஒரு மருத்துவரிடம் என் தந்தை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். ஒரு சில மருந்துகளை எழுதிக் கொடுத்துthulir அவர் ரூ. 50 கட்டணம் வாங்கிக் கொண்டார். எனக்கு அப்போதே அந்த ரூ.50க்காக என் தந்தை எவ்வளவு உழைக்கவேண்டும் என்பது தெரியும். என் தந்தையைப் போல பல ஏழைகள் உள்ளனர். அன்றே நான் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்தேன்" என தெரிவித்துள்ளார்.
Congratulations Dr
ReplyDelete