இந்த &நம் முன்னோர்கள் உணவையே
மருந்தாக பயன்படுத்தி ஆரோக்கியமாகவாழ்ந்து வந்தனர். எந்தெந்த பொருட்களை சேர்த்து உண்டால் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து வைத்து இருந்தனர் .தற்போதைய சூழ்நிலையில் அனைத்தும் தலைகீழாக மாறி உணவே விஷமாக மாறிக்கொண்டு வருகின்றது . இக்கட்டுரையில் எந்தெந்த பொருட்களை சேர்த்து உண்டால் நம் உடல் ஆரோக்கியம் கெடும் என்பதைப்பற்றி காண்போம் .
பொதுவாக எதிர் எதிர் குணங்களைக் கொண்ட பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் பொழுது நம் உடலுக்கு ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படுகின்றன . அவை எவை என்று பார்ப்போம் .
பசலைக்கீரையோடு எள்ளை சேர்த்த உணவை அறவே தவிர்க்க வேண்டும் . இந்த இரண்டு பொருட்களிலும் ஒரே பண்பு இருப்பதினால் வயிற்றுப்போக்கு ஏற்படும் .
திப்பிலி யோடு மீன் கண்டிப்பாக சேர்க்கவே கூடாது இது மரணத்திற்கு வழி வகுக்கும். முக்கியமாக வருத்த மீனுடன் திப்பிலி சேர்க்கவே கூடாது .
நுரையீரல் சுவசப்பிரச்சனைகள் இருப்பவர்கள் துளசி அல்லது துளசி சாறு எடுத்துக்கொள்வார்கள் . அப்படிப்பட்டவர்கள் துளசி சாறு பருகி குறைந்தது அரைமணி நேரம் பால் அல்லது பாலுடன் சேர்த்த எந்த விதமான பானங்களையும் பருகக்கூடாது .
தேன் மற்றும் சர்க்கரை கலந்த இனிப்புப்பண்டகளை உண்ணக்கூடாது. இப்படி உண்பதால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் உள்ளது.
முருங்கைக்காய், முள்ளங்கி , பூண்டு போன்ற பொருட்களை உண்ட பிறகு பால் கண்டிப்பாக குடிக்கக்கூடாது. அப்படி குடித்தால் சர்ம அலர்ஜிகள் வரும் .
எலுமிச்சை , மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற சில புளிப்பான பழங்களை உண்டப்பிறகு பால் குடிப்பதை தவிர்க்கவும். இதனால் ஜீரணப் பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் உள்ளன .
வாழைப்பழம் உண்டப்பிறகு மோர் அருந்துதல் கூடாது. இதனால் நம் உடலில் பலப்பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் உள்ளன ஆகையால் இதனை அறவே தவிர்க்க வேண்டும்.
ஆகவே சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...