கல்வி சுற்றுலாவாக அமெரிக்கா வில் உள்ள நாசா விண்வெளி மையத்துக்கு சென்று திரும்பிய சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், நாங்களும் விண்வெளி வீரர்களாவோம் என சபதம் ஏற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் வித மாக ‘விங்ஸ் டு ஃபிளை’ என்ற திட்டம், சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் மூலம் செயல்படுத்தப் படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு 3 சுற்றுகளாக அறிவியல் போட்டிகளை நடத்தி, இறுதிச் சுற்றில் தேர்வு பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு கடந்த ஆண்டு ஜெர்மனிக்கும், அதற்கு முந்தைய ஆண்டு மலேசி யாவுக்கும் தலா 7 மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்த ஆண்டில் 5 மாணவர்கள், 3 மாணவிகள் என 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்துக்கு 10 நாட்கள் கல்வி சுற்றுலா சென்று சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினர்.
அவர்களில் 8-ம் வகுப்பு மாணவன் ஆர்.கோபிநாத் தனது பயண அனுபவம் குறித்து கூறியதாவது:முதலில் விமானத்தில் ஏறும் போது பதற்றமாக இருந்தது. இது வரை வானத்தில் பறந்த விமா னத்தை மட்டுமே பார்த்தவன், முதன் முதலாக விமானத்தில் ஏறுவதை நினைத்து அழுகையே வந்துவிட்டது. முதலில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசா விண்வெளிஆய்வு மையத்துக்கு சென்றோம். அங்குள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்டேவிட் சி.ஹில்மரை சந்தித்து உரையோடினோம். அந்த நிகழ்வு உண்மையில் கனவா, நினைவா என உணரமுடியவில்லை. அந்த அளவு வியப்பாக இருந்தது.ஹூஸ்டனில் உள்ள டவுன் டவுன் சுரங்கப்பாதை, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பாய்லர் மருத்துவக் கல்லூரி, பிராஸோஸ் பென்ட் மாநிலப் பூங்கா, காக்ரல் வண்ணத்துப் பூச்சி மையம், பியர்லேண்டில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், சிஎஸ்ஐ பள்ளி மற்றும் அங்குள்ள தமிழ்ச் சங்கம் ஆகியவற்றையும் பார்வையிட் டோம். அங்கிருந்து ஊர் திரும்பவே மனம் வரவில்லை. மனதை கல்லாக்கிக்கொண்டு வந்தோம்.விமானத்தில் நாங்கள் பேசிக் கொண்டு வரும்போது, நாங்களும் விண்வெளி வீரர்கள் ஆகவேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு மாணவர் எஸ்.ராஜ்குமார் கூறியதாவது:முதன்முதலாக விமானத்தில் புறப்பட்டபோது, வானத்தில் இருந்து சென்னை மாநகரை பார்த்தேன். அது இரவு நேரம். மாநகரம் முழுவதும் எரிந்த மின் விளக்குகள், தங்கத்தை தூளாக்கி தூவியதுபோல இருந்தது.அமெரிக்காவில் எல்லாம் ஒழுக்கமாக இருக்கிறது. குப்பையைக் கொட்டுவதாக இருந்தால்கூட வரிசையில் சென்று கொட்டுகின் றனர். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், தானாக முன்வந்து உதவுகின்றனர்.நாசா விண்வெளி மையத்துக்கு சென்றபோது, நிலவுக்கு முதலில் சென்ற விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பேச்சை நாசா வில் இருந்து கேட்கப் பயன் படுத்திய ஸ்பீக்கரை காண்பித்த னர்.
நிலவுக்கு செல்வதன் சிரமங் கள் குறித்தும் விளக்கினர். இது எங் களுக்கு மிகப்பெரிய அனு பவத்தை கொடுத்தது.செயின்ட் ஆன்டோனியோ மேயர் ரொனால்டு அட்ரியன் நிரன்பெர்க், வாசல் வரை வந்து எங்களை அழைத்துச் சென்றார். அவரது எளிமை எனக்கு பிடித் திருந்தது. இந்த வாய்ப்பை வழங் கிய மாநகராட்சி மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் ஆகியவற் றுக்கு எனது நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன். இந்த பயணம் மூலம், நானும் ஒரு விண்வெளி வீரனாக வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்த்துகள் மாணவர்களே
ReplyDelete