பிரிட்டன் கல்வி நிறுவனங்களில் பயில
விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகளவில் விதிக்கப்படுகின்றன. ஆனால், பிரிட்டனின் நட்பு நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு எளிதாக விசா கிடைத்துவிடுகிறது.
நட்பு நாடுகள் பட்டியலில் சீனா, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மெக்சிகோ, பக்ரைன், செர்பியா, டொமினிகன் குடியரசு, குவைத், மாலத்தீவு, மெக்காவ் ஆகிய நாடுகளை பிரிட்டன் சமீபத்தில் சேர்த்துள்ளது.
இந்தியா இந்த பட்டியலில் இடம்பெறாதது இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், லண்டன் மேயர் சாதிக் கான் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீத்துக்கு ஒரு கடிமத் எழுதியுள்ளார். அதில், விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். லண்டன் மேயர் சாதிக் கானும்,உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீத்தும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...