சென்னை: சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் வளாகங்களில், புத்தக விற்பனை கடைகள் திறக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய
பள்ளிகளில், பாடம் நடத்துவதை தவிர, வேறு எந்தவித வணிக நடவடிக்கைகளிலும்
ஈடுபடக் கூடாது என, தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டில்லி உயர்
நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் புதிய சுற்றறிக்கையை
அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: சி.பி.எஸ்.இ., பள்ளி களில், சிறிய
பெட்டி கடை போன்று, புத்தக விற்பனை கடை திறக்கலாம். அவற்றில்,
என்.சி.இ.ஆர்.டி., என்ற, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனத்தின் பாடத்திட்ட புத்தகங்கள், மற்ற பாட புத்தகங்கள், 'ஸ்டேஷனரி'
பொருட்களை விற்பனை செய்யலாம். ஆனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம்,
தங்கள் பள்ளியில் உள்ள கடைகளில் மட்டுமே, பொருட்கள் வாங்க வேண்டும் என,
கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த கடையை வணிக ரீதியான பயன்பாட்டுக்கும்
மாற்றக் கூடாது. இதுகுறித்து, பள்ளிகள் மீது புகார் வந்தால், கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...