பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு ஆகஸ்ட் முதல் அமல்: கல்வி அமைச்சர் பேச்சு அரசு ஊழியர்களின் பிள்ளைகளை,
அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று,, கட்டாயப்படுத்த முடியாது: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
ஆகஸ்ட் மாதம் முதல், அரசுப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு, அமலுக்கு வருகிறது என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், 80.24 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது
அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்கள், எந்தவொரு போட்டித்தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது
தனியார் பள்ளிகள், பள்ளி வேலை நாட்களில் 'நீட்' தேர்வு பயிற்சி மேற்கொள்ளகூடாது. விடுமுறை நாட்களில் மட்டுமே அளிக்க வேண்டும்
இதை மீறினால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது
ஈரோடு முதல் மேட்டுப்பாளையம் வரையிலும், அதேபோல் பவானி முதல், சத்தியமங்கலம் வரை, நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். வரும் ஆக., முதல் தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும், பயோ மெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில், வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது
கூடிய விரைவில், 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பணியில் அமர்த்தப்படும்
அரசு ஊழியர்களின் பிள்ளைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று, கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...