இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை
கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவினருக்கு, மூன்றாம் கட்ட ஒதுக்கீடு, நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, இரண்டு விதமான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கும், மற்றவர்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கும் நடத்தப்படுகிறது.
ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.
ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.
மூன்றாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, 50 காலியிடங்களுக்கு, நாளையும்; விளையாட்டு பிரிவினருக்கு, 150 காலியிடங்களுக்கு, நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, இ - மெயிலில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், நேற்று முன்தினம் துவங்கிய, தொழிற்கல்வி கவுன்சிலிங், இன்று முடிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...