மாநில அளவில் நடந்து முடிந்துள்ள,
எம்.சி.ஏ., கலந்தாய்வின் முடிவில், 90 சதவீத இடங்கள், மாணவர் சேர்க்கையின்றி காலியாகவே உள்ளன. தமிழகத்தில், 97 கலை, அறிவியல் கல்லுாரிகளில், 3,020 இடங்கள்; 107 பொறியியல் கல்லுாரிகளில், 7,645 இடங்கள் உட்பட, எம்.சி.ஏ., பிரிவில், 10 ஆயிரத்து, 665 இடங்கள் உள்ளன.
ஆனால், நடப்பாண்டிற்கான எம்.சி.ஏ., கலந்தாய்வில், 1,569 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
கடந்த, 25 முதல், 28ம் தேதி வரை நடந்த கலந்தாய்வு முடிவில், 1,222 பேர் மட்டுமே சேர்க்கை ஆணையை பெற்றனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், முதன் முறையாக, கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், துணை கலந்தாய்வு நடத்தப்பட்டது. இருப்பினும், மொத்த மாணவர்கள் சேர்க்கை, 10 சதவீதம் கூட எட்டவில்லை.
தொடர்ந்து, எம்.பி.ஏ., மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல் கட்டமாக, மாற்றுத் திறனாளி மாணவர்கள், 15 பேர் பங்கேற்று, விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர். பொது கலந்தாய்வின், முதல் நாளான இன்று, 844 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.எம்.சி.ஏ., படிப்பை போன்று, எம்.பி.ஏ., பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கை பெரிதாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.ஏ., பிரிவில், மாநில அளவில், 320 கல்லுாரிகளில், 13 ஆயிரத்து, 82 இடங்கள் உள்ளன. ஆனால், கலந்தாய்வில் பங்கேற்க, 6,255 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...