பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2015-ம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் முறைப்படுத்தப்படாத துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபத்தினைப் பெறலாம்.
தனிநபர் ஒருவரால் இந்தத் திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 1000 முதல் 5000 ரூபாய் வரை வருவாய் பெற முடியும். லாபமானது முதலீட்டாளர்களின் வயது மற்றும் பங்களிப்பினை பொருத்து மாறும்.
மாதம் 84 ரூபாய் முதலீடு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் மாதம், காலாண்டு மற்றும் அரையாண்டு என மூன்று விதங்களில் தங்களது பங்களிப்பினை அளிக்கலாம். எனவே மாதம் குறைந்தது 84 ரூபாய் என முதலீட்டினை செய்யத் துவங்கினால் 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் பெற முடியும். மாதம் 84 ரூபாய் என 42 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஒவ்வொரு ஆண்டும் 24,000 ருபாய் எனப் பென்ஷன் பெற முடியும். இதற்குத் தபால் அலுவலகங்கள் அல்லது வங்கிகளில் சேமிப்பு கணக்கு ஒன்றைத் துவங்கினால் போதுமானதாக இருக்கும்
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு அனைத்து முக்கிய வங்கிகளின் இணையதளப் பக்கங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அதனைப் பதவிறக்கம் செய்து அச்சிட்டுப் பூரித்துச் செய்து வங்கிகள் கேட்கும் பிற அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்து அடல் பென்ஷன் யோஜனா கணக்கினை துவங்கலாம்.
தகுதி அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் முதலீடு செய்யலாம். ஆதார் மற்றும் மொபைல் தான் இவர்களுக்கான முக்கிய வாடிக்கையாளர் அடையாள ஆவணமாக இருக்கும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினைத் துவங்கும் போது ஆதார் எல்லை என்றாலும் விரைவில் அதனைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
Article courtesy :
Written By: Tamilarasu
Written By: Tamilarasu
Good plan future
ReplyDelete