சென்னை, ஜூலை 8 புதிதாக மின் இணைப்புப் பெறுவதற்கு 5 சதவீதம் மட்டுமே வைப்புத் தொகை உயர்த்தப் படவுள்ளது. ஆனால், மின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
மின் கட்டணம் மற்றும் வைப்புத்தொகை உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மாநிலத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கு 5 சதவீதம் மட்டுமே வைப்புத் தொகை உயர்த்தப்படும். அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஆனால், மின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இளநிலைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு 960 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இப் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்ட பிறகு, மின் வாரியத்துக்கு மின்மாற்றிகள் உற்பத்தி செய்வதற்கான தாமிரம் பற்றாக்குறை எதுவும் இல்லை. வேறு இடங்களில் இருந்து அவை கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, தற்போது மின்மாற்றிகள் தேவையான அளவு உற்பத்தி செய்ய முடிகிறது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...